பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

1289 0

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தை பராமரிப்பு: பிறந்து 28 நாட்களுக்கு உட்பட்ட குழந்தைகயை பிறந்த குழந்தை (அ) பச்சிளம் குழந்தை (அ) நியோனேட் (Neonate) என்கிறோம்.

பிறந்த குழந்தைகள் பற்றிய முக்கிய தகவல்கள்

 • பிறந்த குழந்தைகளின் நீளம், ஆண் குழந்தைகளுக்கு 50cm (20 inches) மற்றும் பெண் குழந்தைகளுக்கு 49 cm (19.6inches) ஆக இருக்கும்.
 • சராசரியாக பச்சிளங் குழந்தைகளின் உயரம் 5- 53.75 ஆக இருக்கும்
 • பச்சிங் குழந்தைகளின் எடை பொதுவாக, பிறக்கும் போது 2700 – 3850 gm ஆக இருக்கும். இது பொருளாதார நிலையைப் பொறுத்து வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்கும்.
 • தலைச் சுற்றளவு(Head circumference) 33 – 37 செ.மீ வரை இருக்கலாம்.
 • மார்பு சுற்றளவு (Chest Circumference)தலை சுற்றளவை விட 3 செ.மீ குறைவாக இருக்கும். மார்பு கூடு உருளை வடிவமாகக் காணப்படும்.

நமது உடலின் தோலில் ஏதாவது பச்சை (அ) கருப்பு நிறப்படலம் காணப்பட்டால் அது மங்கோலியன் ஸ்பாட் (Mangolian Sport) எனப்படும். இது பெரும்பாலும் பின்புறத்தில் முதுகு மற்றும் புட்டம் காணப்படும். இது குழந்தைகள் வளரும் போது தானாக மறைந்து விடும். இதற்கு சிகிச்சை ஏதும் கிடையாது.

தோல்

 • தோல் சிவப்பு அல்லது ரோஸ் நிறமாக இருக்கும். கருப்பு நிற குழந்தைகளின் நிறம் சிவப்பு கலந்த கருப்பு நிறமாக இருக்கும்.
 • ஆரோக்கியமான குழந்தைகளுக்கும், கை மற்றும் கால்கள் நீல நிறமாக தோன்றலாம். இது பிறந்த சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்து விடும்.
 • தோலில் தயிர் போன்ற மஞ்சள் கலந்த நிற படலம் காணப்படலம். இது வெர்னிக்ஸ் கேஸியோஸா (VernixCaseosa) எனப்படும்.
 • தோள் பட்டை, கை, கால் மற்றும் நெற்றியில் பரவலாக இறகு போன்ற முடி காணப்படும். இது லானுகோ (Lanugo) எனப்படும்.

உடலமைப்பு

பச்சிளங் குழந்தைகளுக்கு அதிகமாக அடிப்போஸ் திசு இருக்கும். இது பெரும் பாலும் கை கால்களை மடித்து வைத்திருக்கும்

காது

முழு மாத பச்சிளங்களின் குறுத்தெலும்புகள் முழு வளர்ச்சியடைந்துக் காணப்படும்.

 பாதம் : பாதத்தில் ரேகைகள் தெளிவாக இருக்கும்.

 பெண் பிறப்பு உறுப்பு

பிறந்த குழந்தைகளுக்கு பெரிய உதடு நன்றாக வளர்ந்து கிளைட்டோரிஸ் சரியாக காண முடியாத நிலையில் இருக்கும்.

ஆண் பிறப்புறுப்பு

விதைப்பை நன்கு முதிர்ச்சியடைந்து, மேல்புற தோல் பல மடிப்புகளுடன் காணப்படும். விதை (testes) விதைப்பையில் இறங்கி இருக்கம்.

ஆரோக்கியமான பச்சிளம் குழந்தைக்குரிய உடல் செயலியல் பண்புகள்

அக்குல்களில் வெப்பநிலை

 

 • 5 -37.6°C (97.9 – 97.7°F)
 • குழந்தை அழும்போது உடல் வெப்பம் சிறிது அதிகரிக்கும்

இதயதுடிப்பு

 • சராசரி : 120-140 b/m
 • அழுகை இதய துடிப்பை அதிகரிக்கும்
 • உறக்கம் இதய துடிப்பை குறைக்கும்.
 • முதல் செயல்பாட்டின் போது (6-8 hrs), இதயதுடிப்பு 180 b/m அடையும்

மூச்சுவிடல்

 • 30-60 b/m
 • குழந்தை அழும்போது சுவாசம் அதிகரிக்கும்
 • தூங்கும்போது குறையும்.

இரத்த அழுத்தம்

 • கையில் 65/41 mm/Hg மற்றும்
 • காலில் மீன் அழுத்தம் 50 mm of Hg
 • அழுகை மற்றும் உடற்செயற்பாடு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்

செவிலிய கண்காணிப்பு

ஆரோக்கியமான குழந்தைக்கு சிறந்த பராமரிப்பு தாயினால் மட்டுமே குழந்தைக்கு அளிக்க முடியும். இதற்கு செவிலியர் மற்றம் மருந்துவர்களின் கண்காணிப்பு தேவை 80% குழந்தைக்கு சிறிதளவு பராமரிப்பு தேவைப்படுகிறது.

 • பச்சிளங் குழந்தைகளுக்கு பிறந்த முதல் வாரமானது முக்கிய காலமாகும். ஏனெனில்இந்தியாவில் 50 – 60% பச்சிளங்குழந்தைகள் இந்த காலத்தில் இறந்து விடுகின்றனர்.
 • இது கிராமங்களில் பிரசவ வசதி குறைவாக கிடைக்கும் பகுதியில் அதிகமாகஉள்ளது. வீட்டின் சுற்று சூழல் காரணியும் இதற்கு முக்கிய காரணமாகும்.

பச்சிளங்குழந்தை பராமரிப்பு

 • இதய மற்றும் நுரையீரல் செயல்பாட்டினை தூண்டுதல்,
 • உடல் வெப்பநிலையை பாதுகாத்தல்
 • நோய் தொற்றினைக் குறைத்தல்
 • முறையாக தாய்பால் கொடுத்தல்
 • பிறவியிலேயே ஏற்படும் மற்றும்பெறப்பட்ட நோய்கள் மற்றும் நோய் தொற்றினை கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பராமரிப்பு முறைகள் .

 1. உடனடி பராமரிப்பு முறை (Immediate care)
 2. தினசரி பராமரிப்பு (Daily routine care)

உடனடி பராமரிப்பு முறை

உடல் வெப்பநிலையை பாதுகாத்தல், மூச்சு குழாயின் அடைப்பை நீக்குதல், சுவாசத்தை தூண்டுதல் மற்றும் இரத்த ஓட்டத்தை பராமரித்தல் ஆகியவைகள் இதில் அடங்கும்.

பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழும் போது சுவாசம் தானாகவே ஏற்படுகிறது. இதனால் 95-98% பச்சிளங்குழந்தைகளுக்கு சுவாசத்தை தூண்டும் (Resuscitation) முயற்சி ஏதும் தேவையில்லை .

மூச்சு குழலின் அடைப்பை நீக்குதல்

சுவாச பாதையை சுத்தம் செய்தல்

இருதய சுவாச கோளாறுகள் ஏற்டாமல் இருப்பதற்கு (எ . கா சுவாசம்): இது முக்கியமான ஒன்று குழந்தை பிறந்தவுடன் மற்றவையெல்லாம் இரண்டாவது தான்

 • சரியான மூச்சுவிடுதலுக்கு மூச்சுக்குழலில் இருக்கும் சளி மற்றும் கோழைப் பொருட்கள் மெதுவாக நீக்கப்பட வேண்டும். அமினியாட்டிக் திரவமும் உறிஞ்சுக் குழலின் மூலம் எடுக்கப்பட வேண்டும்.
 • பிரசவத்தின்போது குழந்தை ஹைப்பாக்சியாநிலையிலிருக்கும்போது சாதாரண சுவாசம் சரியில்லை என்றால் உடனடியாக செயற்கை சுவாசம் தேவைப்படும்.
 • செயற்கை சுவாசம் தேவைப்படும்போது. உறிஞ்சுகுழாய் மூலம் வெளியேற்றுதல் ஆக்ஸிஜன் முகமூடி, மற்றும் இன்குபேஷன் இவையெல்லாம் சுவாசத்திற்கு உதவும்.
 • பிரசவ வார்டுகளில் செயற்கை சுவாசத்திற்கு தேவையான பொருட்கள், வைக்கப்படவேண்டும். இதய துடிப்பு 5 நிமிடங்களுக்கு நின்று போனால் குழந்தை இறக்கவும் நேரிடலாம்.

 

தினமும் அளிக்கப்படும் பராமரிப்பு

பிறந்த குழந்தைகளுக்கு பொதுவாக கொடுக்கப்படும் செவிலியத்தின் பராமரிப்பின் குறிக்கோள் குழந்தையை பத்திரமாக பாதுகாத்தல் பராமரிப்பை ஊக்கப்படுத்துதல்

கதகதப்பு

கதகதப்பானது குழந்தையை ஈரமில்லாமல் வைப்பதற்கு உதவுகிறது. இரு மடிப்புள்ள துணிகளில் வைத்து தலை மற்றும் கால் பகுதிகளை நன்கு மூடிவைக்கப்பட வேண்டும். குழந்தை தாயின் பக்கத்தில் வைக்கப்பட வேண்டும்.

அப்போது தான் குழந்தையின் உடல் கதகதப்பாக இருக்கும். குழந்தை தோலோடு தோல் உரசும் படி வைக்கப்பட வேண்டும் (கங்காரு) இந்த முறை குழந்தைக்கு தேவையான வெப்பநிலை கிடைக்கும் மற்றும் தாய் பால் அருந்தவதற்கு ஏற்றாற்போல் இருக்கும்.

தொப்புள் கொடி பராமரிப்பு

 • தொப்புள் கொடியை 2-3 inch பிரசவத்திற்குப் பின் தொற்று நீக்கம் செய்யப்பட்ட கயிறு அல்லது கிளிப் வைத்து கட்டப்பட வேண்டும்.

கண்களை பராமரித்தல்

 • பிறந்த உடன் கண்களை தொற்று நீக்கப்ட்ட பஞ்சு உருண்டைகளால் தொற்று நீக்கம் செய்யப்பட்ட தண்ணீரால் (அ) உப்பு தண்ணீரால் நனைத்து துடைக்க வேண்டும்.
 • கண்களில் மை விடுதல் கூடாது ஏனெனில் தொற்று நோய் (அ) நஞ்சு தன்மையிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு.
 • கண்கள் சிவந்திருத்தல், ஒட்டிய கண்கள் (அ) அடிக்கடி தண்ணீர் வரக் கூடிய கண்களை உற்று நோக்குதல் வேண்டும் அவற்றை கண்டறிந்து. ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

தோல் பராமரிப்பு

 • தாயின் கையில் குழந்தை கொடுக்கப்படுவதற்கு முன் குழந்தையின் மேல் உள்ள கோழை, மெக்கோனியம், மற்றும் இரத்தத்தை துடைத்து கொடுக்கப்படவேண்டும்.
 • குளிப்பாட்டுதல் கூடாது. சிறப்பாக தொப்புள் கொடி விழுவதற்கு முன் குழந்தையை தண்ணீரில் மூழ்கி எடுக்க கூடாது.
 • கோடை காலத்தில் குழந்தைளின் உடலை வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து துடைக்கலாம் மருந்து பொருள் சேர்க்கப்படாத சோப்பை பயன்படுத்தலாம்.

பச்சிளம் குழந்தை பராமரிப்புதாய் பால் புகட்டல்

 • தாயின் மார்பகத்தருகே குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் கொண்டு போகப்படவேண்டும். (அ) தாய் மயக்க நிலையில் இருந்து எழுந்தவுடன்.
 • குழந்தைக்கு வேறு எந்த உணவும் கொடுக்கக்கூடாது. சீம்பால் அதாவது கொலஸ்ட்ரம் மட்டுமே கொடுக்கபட தாய்மார்களுக்கு கல்வி புகட்ட வேண்டும்.
 • எப்படி தாய் பால் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
 • ஆரம்பத்தில் தாய் பால் குறைந்த இடைவெயியில் 1-2 மணி நேரத்திற்கும் பிறகு 2 – 3 மணி நேர இடைவெளியிலும் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இது குழந்தை பிறந்த முதல் வாரத்தல் கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தை குளியல்

 • மருத்துவமனையிலோ (அ) வீடுகளிலோ கீழ்கண்ட முறையின்படி குளிக்க வைக்க வேண்டும்.
 • வெதுவெதுப்பான தண்ணீரினால் வெது வெதுப்பான அறையில் மிகவும் மெதுவாகவும் குளிக்க வைக்க வேண்டும்.
 • குழந்தையை உடனடியாக காய்ந்த துண்டையோ (அ) காய்ந்த துணியையோ வைத்து துடைக்க வேண்டும். தலைப் பகுயிலிருந்து கால் பகுதி வரை.
 • வெளிபுறமான பகுதியில் குழந்தையை குளிக்க வைத்தல் கூடாது. தேவையில்லாமல் குழந்தையை குளிர்காலத்தில் வெளியே காட்டுதல் கூடாது. தண்ணீரில் குளிப்பதை காட்டிலும் தண்ணீர் வைத்து துடைப்பது குளிர் காலத்தில் நல்லது. ஏனெனில் நீர்கட்டு (அ) காய்ச்சலின் குளிர்ந்த நிலை ஏற்படாமல் (Rigor) தடுக்கப் படுகிறது.
 • ஆலிவ் எண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம் 3 (அ) நான்கு வாரங்கள் கழித்து செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளின் செயல்களை துரிதப்படுத்தும்.
 • குழந்தையை சூரிய ஓளியில் காட்டுவதால் Vit ‘D’ மற்றும் வெதுவெதுப்பான நிலை கிடைக்கும். டால்கம் பவுடர் அக்குள் பகுதியிலும் தொடை சந்துகளிலும் பூசப்பட்டால் ஈரத்தன்மைகள் இல்லாமல் இருக்கும்.
 • குளிக்கும் போது ஏதாவது அசாதாரண தன்மை மற்றும் நோய் தொற்று இருக்கிறதா என்று உற்று நோக்க வேண்டும்.

குழந்தைக்கு ஆடை அணிதல்

 • குழந்தைக்கு தளர்ச்சியான, பருத்தி உடையை அணிய வேண்டும். சட்டையின் முன் பகுதியில் திறப்பு வைக்கப்படவேண்டும் (அ) போடுவதற்கு சுலபமாக இருத்தல் வேண்டும்.
 • பெரிய பொத்தான்கள், பிளாஸ்டிக், சின்தட்டிக் ஆடைகள் (அ) நைலான் நாப்கின்கள் போடுதல் கூடாது.
 • நாப்பின்கள் பெரிய சதுரவடிவில் தண்ணீர் உறிஞ்சக்கூடிய துணிகளால் இருக்க வேண்டும்.
 • கழுத்தையும் வயிற்றுப் பகுதியையும் இறுகக் கூடிய நிலையில் இருத்தல் கூடாது.
 • குளிர்காலங்களில் உல்லன் (அ) சணல் துணி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
 • பூச்சி உருண்டைகள் பயன்படுத்திய ஆடைகளை பயன்படுத்த கூடாது.

உற்று நோக்குதல்.

 • பொதுவான கவனிப்பு
 • நோய் தொற்றுள்ள மனிதர்கள் குழந்தையை தொடுதல் கூடாது
 • கண்டிப்பாக குழந்தையை பராமரிக்கும் போது சரியான முறையில் கைகளை கழுவிய பின்னரே தூக்கவேண்டும்.
 • குழந்தையை மல்லாக்க படுக்க வைக்க வேண்டும். இது குழந்தை இறப்பை தடுக்கும்.
 • ஏதாவது அசாதாரணங்கள் இருப்பதை கண்டறியகுழந்தையை முழுவதுமாக ஒரு நாளைக்கு இரண்டு தரம் உற்றுநோக்க வேண்டும்.
 • வெப்பநிலை, சுவாசம், துடிப்பு, உணவூட்டல், நடத்தைகள், மலம், சிறுநீர், தூக்கத்தின் தன்மை இவற்றை தினமும் கணக்கிட வேண்டும்.
 • வாய், கண்கள், காதுகள், மற்றும் தோலில் ஏதாவது நோய் தொற்று உள்ளதா என கவனிக்க வேண்டும்.
 • எடை கணக்கிடுதல்
 • முதல் மாதத்தில் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் குழந்தையின் எடை 3 கிராம்/ நாள்
 • இரண்டாம் மாதத்தில் 20 கிராம்/நாள் பிறகு முதல் வருடத்தில் 10 கிராம்/ நாள்
 • பெரும்பாலான குழந்தைகள் பிறப்பு எடை5 – 6 மாதங்களில் இரண்டு மடங்காகும்
 • ஆனால் முதல் வாரத்தில் உடலியில் மாற்றங்களால் எடை குறையும். ஏனெனில் வெர்னிக்கிஸ், கோழை வெளியேற்றபடுவதாலும் திருப்தி இல்லத உணவூட்டலாலும் எடை குறைகிறது.
 • சரியான உணவூட்டலினால் பெரும்பாலான குழந்தைகளுக்கு 7-10 நாட்களில் எடை கூடுகிறது.
 • சரியான உணவு கிடைக்கும் குழந்தைகளுக்கு சரியான தூக்கமும் ஒரு நாளைக்கு 5 – 6 முறை சிறுநீர் கழிக்கவும் படுகிறார்கள்.

தடுப்பூசிகள்

 • மருத்துவமனை பிரசவத்தில் எல்லா குழந்தைகளுக்கும் BCG தடுப்பு மருந்து மற்றும் OPV (Oral Polio Vaccine) ஹெபடைடிஸ் ‘B’ தடுப்பு மருந்து பிறந்த உடனே கொடுக்கப்படுகிறது.
 • மற்ற மருந்துகள் ஒரு மாதம் இடைவெளியில் கொடுக்கப்படுகிறது. (ஹெபடைடிஸ் B)
 • வெளியில் (அ) வீட்டில் பிரசவமான குழந்தைகளுக்கு BCG மற்றும் OPV அளவுகள் ஒருமாதம் மற்றும் 6 மாதங்களில் கொடுக்கப்படுகிறது. (ஹெபடைடிஸ் B)
 • வெளியில் (அ) வீட்டில் பிரசவமான குழந்தைகளுக்கு பிறந்த ஒரு வாரத்தில் அதாவது முதல் வாரத்தில் கொடுக்கப்பட வேண்டும். தாய் மார்களுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தை பற்றி கூறவேண்டும்.

பின்பற்றவேண்டிய அறிவுரை

 • ஒவ்வொரு இளம் குழந்தைகளுக்கும் இந்த அறிவுறையை பின் பற்றவேண்டும் முதல் மூன்று மாதங்கள் மற்றும் மூன்று மாத இடைவெளியில் பின்பற்றபட வேண்டும்.
 • வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்கீடுதல் மற்றும் உடல் நல பிரச்சனையை பராமரித்தல்
 • குழந்தை பருவத்தில் ஏற்படும் நோய்களை வராமல் தடுப்பதற்கு

பாரம்பரிய பழக்கத்தினால் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தான விளைவுகள்

அதிக அளவில் உள்ள பாரம்பரிய பழக்கத்தினால் குழந்தைகளுக்கம் தாய் மார்களுக்கும் அதிக அளவில் விளைவுகள் ஏற்படுகிறது.

 • விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை சுவாச முறைகள் (வாயினால் ஊதுதல்)
 • சுத்தமற்ற முறையில் தொப்புள் கொடியை வெட்டுதல் மற்றும் தொப்புள் கொடியில் மாட்டு சாணம், மணல் வைத்தல்
 • பிறந்தவுடன் குளிக்க வைத்தல்
 • முதல் சுரக்கும் பாலை வெளியேற்றுதல், தாய்ப்பால் கொடுப்பதில் தாமதம், தாய்பால் கொடுப்பதற்கு முன் வேறு ஏதாவது பாலை தருதல், இடைவெளியில் தண்ணீர் கொடுத்தல்
 • பெண் குழந்தைகளை நிராகரித்தல் மற்றம் ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளை நிராகரித்தல்
 • பிறந்தவுடன் கண்களுக்கு மை விடுதல்
 • கண்கள் மற்றும் காதுகள், மூக்கு துவாரத்தில் எண்ணெய் விடுதல்
 • சுகாதாரமில்லாமல் தயாரிக்கப்பட்ட பாலை வாய் வழியாக கொடுத்தல்.
 • செயற்கை உணவூட்டலின் போது தண்ணீராக்கப்பட்ட பால் கொடுத்தல்
 • பிறந்த குழந்தைக்கும் பிராந்தி மற்றும் ஒடியம் கொடுத்தல்
 • பால் புட்டியை பயன்படுத்துதல் மற்றும் செயற்கையாய் தயாரிக்கப்பட்ட பாலை குழந்தைக்குக் கொடுத்தல்.

 

குழந்தை பராமரிப்பு : 0 – 12 மாதம் வரை >>>

Related Post

பிறந்த குழந்தைகளின் நடவடிக்கைகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நடவடிக்கைகள்

Posted by - அக்டோபர் 18, 2019 0
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நடவடிக்கைகள் தெரியுமா ? பிறப்பு முதற்கொண்டே, உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை உலகத்திற்கு வந்தது முதற்கொண்டே அநேக காரியங்களைச் செய்யமுடியும். உங்கள் குழந்தை…
11 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 11 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
11 மாத குழந்தை வளர்ப்பு 11 மாத குழந்தை வளர்ப்பு அவள் வீட்டுக்கு அருகே இருக்கும் எளிமையான கொண்டாட்டங்களை விரும்புவாள். தன்னை சுற்றி அதிகமான மக்கள் இருந்தால்…
5 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 10 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
10 மாத குழந்தை வளர்ப்பு 10 மாத குழந்தை வளர்ப்பு உங்கள் குழந்தைக்கு  எந்தத் திட உணவு சிறந்தது? உங்கள் குழந்தையால் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியும்! எளிமையான…
8 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 8 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019 0
8 மாத குழந்தை வளர்ப்பு 8 மாத குழந்தை வளர்ப்பு:  என் குழந்தையுடன் உணவு நேரங்கள் என் குழந்தை நடக்கத் தொடங்கிவிட்டது! கவனிக்கவும் ! அங்கே ஒரு…
குழந்தையின் அழுகைக்கான காரணங்கள்

குழந்தையின் அழுகைக்கான காரணங்கள் !

Posted by - அக்டோபர் 20, 2019 0
குழந்தையின் அழுகைக்கான காரணங்கள் அழுகை குழந்தை வளர்ப்பில், கைக்குழந்தையைக் கையாள்வது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம்தான். அதிலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன