கொரோனா தீநுண்மி அல்லது கொரோனா வைரஸ்
Novel coronavirus (2019-nCoV)
கொரோனா வைரஸ்: குறுக்குவெட்டு தோற்றம்
கொரோனா தீநுண்மி அல்லது கொரோனாவைரசு (Coronaviruse) இது பாலூட்டிகள் மற்றும் பறவைகளுக்கு நோய்களை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். இவை பசுக்கள் மற்றும் பன்றிகளுக்கு வயிற்றுப்போக்குகளை ஏற்படுத்தும், கோழிகளுக்கு மேல் சுவாச நோயை ஏற்படுத்தும்.
இந்த வைரஸ் ஆனது மனிதர்களுக்கும் சுவாச தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றன இந்த வகை தொற்று நோய்கள் பெரும்பாலும் மிதமானதாகும் ஆனால் மிகச் சில சமயங்களில் இதன் பாதிப்பு மிக கடுமையாக உள்ளது அதுபோன்ற ஒரு பாதிப்பானது தற்போது சைனாவில் ஏற்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ்களால் பரவும் நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது தீநுண்மி தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனோவைரசு தாக்கம்
2019 டிசம்பர் 31 அன்று சீனாவின் வூகன் (Wuhan) என்ற மாகாணத்தில் முதன் முதலாக இந்த கொரோனா வைரஸ் (Novel coronavirus (2019-nCoV) கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உலகம் அழிவது அணு ஆயுதத்தால் அப்படி இல்லை என்றால் இயற்கை பேரிடர்களால் இப்படித்தான் சொல்லிக்கொண்டு இருந்தோம் ஆனால் அதையும் மீறி இந்த மாதிரி வைரஸ் தாக்குதலால் கூட உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் இருக்கு என்பதை கொரோனா வைரஸ் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
(இன்று : 28-01-2020)
- சீனாவில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சீனாவுக்கு வெளியே, தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தைவான், மலேசியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், நேபாளம், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 41 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை சீனாவுக்கு வெளியே எந்த மரணமும் பதிவாகவில்லை.
- இன்றுவரை மொத்தம் 12 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது
சீனாவில் கிட்டத்தட்ட 6 கோடி மனிதர்களுக்கு மேல் அவங்க வீட்டில் இருந்து வெளிவர முடியாமல் இருக்கிறார்கள் என்கிற செய்தி வெளிவந்த வண்ணம் தான் இருக்கிறது. வூகன் (Wuhan) என்ற ஒரு இடத்திலிருந்து தான் இந்த வைரஸ் என்பது அதனுடைய முதல் தாக்குதலை தொடங்கியது. இந்த வைரஸ் எப்படி வந்தது எதனால் வந்தது யாரிடமிருந்து வந்தது இந்த கேள்விக்கான பதில் யாரிடமும் இன்றுவரை கிடையாது. வூகன் (Wuhan) மாகாணத்தில் உள்ள இறைச்சி மார்க்கெட்டில் இருந்துதான் இந்த வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் குறிப்பாக இதனுடைய சரியான மூலத்தை இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
ஆனால் இதனுடைய சரியான மூலத்தை கண்டுபிடித்தால் தான் இதை பரவுவதை நிறுத்த முடியும், இப்போது நாங்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளோம் என்று சொல்லி சீன அரசாங்கம் கைவிரித்து விட்டது.
எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியாக பார்க்கும்பொழுது இந்த கொரோனா வைரஸ்.
வூகன் (Wuhan) மாகாணத்தில் இந்த மாதிரியான ஒரு வைரஸ் தாக்குதல் நடைபெற்ற பின்பு எத்தனை மனிதர்கள் அங்கே இருந்து வெயில் வந்திருக்காங்க என்றால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வெளியில் வந்து இருக்கிறார்கள் அது மட்டுமே கிடையாது இந்த வைரஸ் பெரிய அளவில் ஹாங்காங் நகரத்துக்கும் வந்துவிட்டது. ஷாங்காய் என்பதுதான் சீனாவின் மிக முக்கியமான வர்த்தக நகரம் அப்படின்னு சொல்லலாம், அந்த இடத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் வந்த பின்பு இது கண்டிப்பா ஆபத்துதான் என புரிந்து கொண்டு சீனாவை சேர்ந்த நிறைய மாகாணங்கள் எமர்ஜென்சி அறிவித்துவிட்டார்கள்.
ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை
இங்கு முக்கிய கேள்வி என்னவென்றால் இந்த வைரஸை ஏன் கட்டுப்படுத்த இவ்வளவு கடினமாக உள்ளது அல்லது முடியவில்லை என்பதுதான்.
சுமார் 18 வருடங்களுக்கு முன்பு 2003-ல் சார்ஸ் என்ற ஒரு வைரஸ் இதேபோல்தான். (இந்த வைரஸை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.) இப்போது வந்துள்ள கரோனா வைரஸ் மற்றும் சார்ஸ் வைரஸ் இரண்டிற்கும் கிட்டத்தட்ட 70% ஒற்றுமை உள்ளது, ஆனால் சார்ஸ் வைரஸ் ஒருவருக்கு பரவி விட்டது என்ற அறிகுறிகள் தென்பட்ட பின்புதான் அவர்களிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.
மாறாக இந்த கொரோனா வைரஸ் என்பது அவர்களுக்கு அறிகுறி வருவதற்கு முன்பே அடுத்தவர்களுக்கு பரவக்கூடியது, எனவே யார் யார் பாதிக்கப்பட்டார்கள் என்று தெரிந்து நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கும் முன்பே அடுத்தவர்களுக்கும் இது பரவுகின்றது.
உலக சுகாதார மையம் (WHO)
எனவே உலக சுகாதார மையம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் சேர்ந்து என்ன செய்யப் போகிறார்கள் ! ஒரு முக்கியமான கூட்டத்தை கூட்ட போகிறார்கள் அந்தக் கூட்டத்தில்தான் இந்த வைரஸ் தாக்குதலை இந்த உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாக கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க போகிறார்கள்.
இந்தியாவில் இதனுடைய தாக்கம்
போதுதான் இந்தியாவில் இதனுடைய தாக்கம் இருக்கிறதா வைரஸ் பரவி இருக்கிறதா என்கிற ஒரு கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இதில் நமக்கு சற்று ஆறுதலான செய்தி என்னவென்றால் இன்றுவரை இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலமாக உள்ளது, தீவிர சோதனைக்கு பிறகே அனைவரும் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் 31-க்கு மேற்பட்ட இந்தியர்கள் இந்த வைரஸ் தாக்குதல் நடந்த இடங்களில் இருக்கிறார்கள் இவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர அதற்கான திட்டங்களை இந்தியா வகுத்து வருவதாக சொல்கிறார்கள். சீனாவில் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலுள்ள அமெரிக்க குடிமக்களை மீண்டும் அமெரிக்கா திரும்பிக் கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசு ஒரு விமானத்தை சீனாவிற்கு அனுப்ப இருக்கிறது.
சீனாவில் பல பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் பள்ளிகள் கல்லூரிகள் பொதுமக்கள் கூடும் இடங்கள் போன்றவற்றுக்கு பிப்ரவரி மாதம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் சீன குடிமக்கள் தாயகம் திரும்ப வேண்டாம் எனவும் தற்போது சூழ்நிலை சரியாகும் வரை அந்தந்த நாடுகளிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அதேபோல் வைரஸ் தாக்குதல்கள் இல்லாத நபர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பப் படுபவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுமாறு மறைமுகமாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டம்
இப்போது சீனாவில் புத்தாண்டு (25-ஜனவரி 2020) கொண்டாட்டம் மலர வேண்டிய தினம் ஆனால் அதையும் மீறி பல மனிதர்கள் எங்களுக்கு புத்தாண்டு வேண்டாம் அடுத்த வருடம் புத்தாண்டு கொண்டாடிக் கொள்கின்றோம் அப்படின்னு சொல்லி எல்லாருமே அவங்க வீட்டில் முடங்கி இருக்கிறார்கள் அல்லது முடக்கப்பட்டு இருக்கிறார்கள்.
யாரும் சீனாவின் புத்தாண்டை கொண்டாட வேண்டாம் கூட்டமாக நிற்க வேண்டாம் எந்த ஒரு நோய் தொற்று உள்ள நபர்களிடம் அதிகமாக பேச வேண்டாம் இந்த மாதிரியான நிறைய கட்டுப்பாடுகள் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
6 நாளில்: அவசர மருத்துவமனை
பாதிக்கப்பட்ட ஒரு ஒரு நபர்களையும் தனித்தனியா வைத்து பாதுகாப்பதற்காக இப்போது வூகன் (Wuhan) என்கிற ஒரு மாகாணத்தில் 1000 நபர்களை உள்ளடக்கக் கூடிய ஒரு மருத்துவமனையை சீன அரசாங்கம் கட்டி வருகிறது அதுவும் 6 தினங்களுக்குள் அந்த மருத்துவமனையை கட்டி விடுவோம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. (சாரஸ் நோய் வந்தபோது அதாவது 2002 – 2003-ல் காலகட்டத்திலும் இதே மாதிரி துரிதமாக ஒரு மருத்துவமனையை சீனர்கள் கட்டினார்கள்.)
இங்கு சிடி ஸ்கேன் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு ஒரு நபருக்கும் தனித்தனியான படுக்கையாக வசதியும் மற்றும் கழிவறைகள் கொண்ட பெரிய மருத்துவமனையை இருக்கும் என சீனா கூறியுள்ளது.
10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடைகள், முகமூடிகள் எல்லாத்தையும் சீன அரசாங்கம் தயார் நிலையில் வைத்திருக்கிறது. மேலும் சீன அரசாங்கம் அங்குள்ள தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இதுபோன்ற முகமூடிகள் மற்றும் ஆடைகளை அதிக எண்ணிக்கையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதை இந்தியா நன்கு கவனிக்கவேண்டும் இந்தியா மட்டும் கிடையாது எல்லா உலக நாடுகளும் இது போன்ற அவசரகால நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கவேண்டும் தங்கள் நாட்டின் முன் எச்சரிக்கைக்காக.
இந்த வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த சுமார் 4 கோடி மக்கள் உள்ள ஒரு பெரும் பிரதேசத்தை சீனா தனிமைப்படுத்தி உள்ளதோடு சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறிகள்
கொரோனா வைரசு தடுப்பு மருந்து
கொரோனா வைரசுக்கு இது வரை எந்த தடுப்பு மருந்துகள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்க வில்லை என்பது வருத்தமான செய்தி.
ஆனால் பல நாட்டு மருத்துவர்கள் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர ஆராச்சியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
இதுவரை மூன்று தடுப்பூசி திட்டங்களுக்கு தொற்றுநோய்க்கான ஆயத்த கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) துணைபுரிகிறது, பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஒரு திட்டமும் இதில் அடங்கும்.
ஆஸ்திரேலியாவில், ஒரு மூலக்கூறு கிளாம்ப் தடுப்பூசியின் திறனை ஆராய்ந்து வருகிறது, இது வைரஸ் புரதங்களை மரபணு ரீதியாக மாற்றியமைக்கும், அவை கொரோனா வைரஸைப் பிரதிபலிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டும்.
கொரோனா வைரஸ் மேற்பரப்பின் ஸ்பைக்கிற்கு பொருந்தக்கூடிய ஆர்.என்.ஏ தடுப்பூசியை உருவாக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (NIH) மாடர்னாவுடன் (Moderna, Inc.) ஒத்துழைக்கிறது, மேலும் மே 2020 க்குள் உற்பத்தியைத் தொடங்க நம்புகிறது.
கொரோனா வைரசு வரலாறு மற்றும் வகைகள்
கொரோனா வைரசு 1960களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. கோழிகளில் தொற்று மூச்சுக்குழாய் அழற்சித் தீநுண்மி மற்றும் மனித நோயாளிகளின் நாசிக் குழிகளில் இருந்து பொதுவான சளியைக் கொண்ட இரண்டு தீநுண்மிகள் முதன்முதலாகக் கன்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இவை பின்னர்,
- மனித கொரோனாவைரசு 229E (human coronavirus 229E),
- மனித கொரோனாவைரசு OC43 என பெயரிடப்பட்டன.
இந்த நச்சுயிரிக் குடும்பத்தின் பிற தீநுண்மிகள்:
- 2003 : SARS-CoV,
- 2004 : HCoV NL63,
- 2005 : HKU1,
- 2012 : MERS-CoV,
- 2019 : 2019-nCoV உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. (தற்போது சீனாவில் வந்துள்ள வைரசு)
கொரோனா வைரசு 2019-2020
இந்த வைரசு பற்றிய நடப்பு தகவல்களுக்கு இங்கு பார்க்கவும்:
கொரோனா வைரசு முன்னெச்சரிக்கை
இந்த வகை வைரசிடம் இருந்து தங்களையும் தங்கள் அன்பானவர்களையும் பாதுகாக்க சில குறிப்புகள் இங்கு உங்ககளுக்காக.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து மிக விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என அனைவரும் வேண்டிக்கொள்வோம்.