Periyar Quotes Tamil
பெரியார் பொன்மொழிகள் (Periyar Quotes Tamil) அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். இவர் பல துறைகள் தலைப்புகள் பற்றி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடபடுபவை பெண் விடுதலை, பெண் கல்வி, சுயமரியாதை, சமூக முன்னேற்றம், சாதி ஒழிப்பு போன்றவை.
இந்த பதிவில் பகுத்தறிவு & சுயமரியாதை பற்றிய தந்தை பெரியார் பொன்மொழிகள் பார்ப்போம்.
- பெரியாரின் பிற பொன்மொழிகளுக்கு இங்கு சொடுக்கவும்.
- பெரியாரை பற்றிய மேலும் படிக்க இங்கு சொடுக்கவும்.
- பிற தலைவர்களின் பொன்மொழிகள் பார்க்க
திருக்குறள் பற்றி பெரியாரின் கருத்து
அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன..
[wpsm_testimonial]
குறள் ஒரு அறிவுக்களஞ்சியம், பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல்..
[/wpsm_testimonial]
[wpsm_testimonial]
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, மறுப்பு திருக்குறள் ஒன்றே! எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் பகுத்தறிவு பெற்று புது மனிதராகுங்கள்..
[/wpsm_testimonial]
திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க..
திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதோடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்
சுயமரியாதை பற்றிய பெரியாரின் பொன்மொழிகள்
இனமானம் தன்மானத்திலும் பெரிது. உண்மையிலும் பெரிது, பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது, பண ஊற்றுள்ள உத்தியோகத்திலும் பெரிது..
மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான-அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. “மனிதனுக்குப் பிறப்புரிமை சுயமரியாதைதான்.”
விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்த்தாலும் பலன் இல்லை..
மனிதன் சுயமரியாதையை, தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்..
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்..
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு..
[wpsm_testimonial]
தெரியாத-புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பயனே இவ்வளவு பொய்களையும் நம்பவேண்டியவனாகிவிட்டான்.
[/wpsm_testimonial]
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்.
மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியான மான – அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், “மனிதன்”, “மானுடன்” என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள்.
ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமரியாதையைதான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கின்றான்.
[wpsm_testimonial]
சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்.
[/wpsm_testimonial]
பார்ப்பனர்கள் நம்மைச் சூத்திரர்கள் என்று கூப்பிட்டால் நாம் அவர்களை மிலேச்சர்கள் என்று கூப்பிட வழக்கப்படுத்தவேண்டும்..
மொழி பற்றி பெரியார்
சமஸ்கிருதம் கடவுள் பேசிய மொழியாக இருக்கலாம்; அநேக அருள்வாக்கு கொண்ட மொழியாக இருக்கலாம். அது வேறு விசயம். அதனால், பயன் உண்டா என்பதற்குப் பதில் வேண்டும்.
தமிழைப் போற்ற வேண்டுமானால், பரப்ப வேண்டுமானால் மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும்.
- தமிழில் பொது அறிவுக்குப் பத்திரிக்கை இல்லை.
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் இழந்தான்.
மனிதன்
(Periyar Quotes Tamil)
மனிதன் வேட்டி, வீடு இவைகள் கொஞ்சம் பழசானாலும் மாற்றிக் கொள்கிறான். ஆனால் பழமைப் பித்தை மட்டும் பிடிவாதமாக மாற்றிக் கொள்ள மறுக்கிறார்..
- மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்..
- நன்றி விசுவாசம் உடையவன் எவனோ அவன் மாத்திரம் மனிதன் ஆவான்..
மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன..
அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததை(கடவுள்) பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை..
- சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை..
மனிதனுடைய நலம் என்பவற்றுள் எல்லாம் தலை சிறந்த நலம் அவன் மனத் திருப்தியே ஆகும்..
[wpsm_testimonial]
ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்..
[/wpsm_testimonial]
பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்..
- பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்..
வரவுக்கு மேல் செலவு செய்வது விபச்சாரத்தனம் செய்வதைப் போன்றதாகும்..
- பழி என்றால், மானக்கேடு என்றால், இழிவு என்றால் உயிர் விடவும் வேண்டும்..
- உண்மையைப் பேசும்போது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.
- பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில்தான் வளரமுடியும்.
[wpsm_testimonial]
என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்துவிட்டு கடனாளியாக மாறிப் பிறரை ஏமற்றுவது இழுக்கு; இதைவிட விபச்சாரம் என்பது இழிவானதல்ல.
[/wpsm_testimonial]
விபச்சாரத்தைவிட மோசமான பண்பு – அதிகச் செலவு செய்து அதற்காகக் கடன் வாங்கித் திண்டாடுவதுதான்.
30 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி; 1,000 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி என்றால் என்ன அர்த்தம்? தன்னை அடக்காதவனுக்குத்தான் தரித்திரம் உண்டாகும். தன்னை அடக்காதவள்தான் விபச்சாரி.
- நம் மக்கள் அறிவு பெறவேண்டுமானால் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
உலகில் பத்திரிகைகள் இரண்டு விதமானவை.
- தமது வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால், மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை.
- மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்பவேண்டுமே என்று பொதுநலம் கருதுபவர்களால், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை மற்றொன்று.
ஒவ்வொரு மனிதனின் இலட்சியமும், தான் மனிதனாகப் பிறந்தது மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்காக என்றிருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் பழமையை விட்டுக் காலத்திற்கேற்ப முன்னோக்கிச் செல்லவேண்டும்.
பகுத்தறிவு
(Periyar Quotes Tamil)
- சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்..
உலகில், மனிதன் மற்ற உயிரினங்களை விடச் சிறந்தவனாக கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான்.
மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக்கொண்டு வருகிறான். ஆனால், இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தினால் மிக மிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.
இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு, கோயில்-குளம் கட்டிக் கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்ட வெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் கப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ, அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தர வேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.
நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவதுபோல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன் போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?
ஒரு சேலை வாங்கினால்கூட…
சாயம் நிற்குமா?
அதன் விலை சரியா?
இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா?
இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா ?
….. என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத் தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம், சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான்-பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.
உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி; அதை நல்ல முறையில் பயன்படுத்து, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டால்தான் அறிவு வெள்ளாமை கருகிப் போயிற்று.
முன்னோர் சொல்லிப் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல, அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய, கண்டுபிடிக்க, முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.
நம் நாட்டைப் பாரத தேசம் என்று சொல்வது ஆரிய ஆதிக்கத்தைக் குறிப்பதே தவிர வேறில்லை.
[wpsm_testimonial]
மனிதனுக்கு மனிதன் பொது வாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாது..
[/wpsm_testimonial]
[wpsm_testimonial]
எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு அதன் பயனை அளவாகக் கொண்டதேயொழிய அதை ஆக்கியவனையோ, தெய்வீகத் தன்மையையோ இலக்கண அளவையோ, அளவாகக் கொண்டது அல்ல.
[/wpsm_testimonial]
பொருளாதாரம் | பெரியார் பொன்மொழிகள்
(Periyar Quotes Tamil)
- ஏழை பணக்காரத் தன்மை ஜாதியை பொறுத்தே அநேகமாய் 100 க்கு 95 பங்காக இருந்து வருகிறது..
செல்வம்(பணம்) தேட வேண்டும் என்று கருதி, அதில் இறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது.
பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக்கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டி. இத்தியாதி போட்டிகள் அவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு விடுகின்றன.
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக்கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பார்கள்.
[wpsm_testimonial]
இன்றைய அமைப்பில் கையில் காசில்லா விட்டால் மனிதன் பெரிதும் யோக்கியனாகக் கூட நடந்து கொள்ளமுடியாது.
[/wpsm_testimonial]
- மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன், அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும்தான் காரணம்.
- ஆசையால், நல்ல முறையில் கொஞ்சம் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்து கொள்ளவோ வேண்டியதில்லை.
ஒரு நாட்டின் உணவு உற்பத்திக்கு எல்லை உண்டு. அதற்கு உட்பட்டுதான் மக்கள் தொகை எண்ணிக்கையும் இருக்க வேண்டும்..
அறிவியல் பெரியார் பொன்மொழிகள்
(Periyar Quotes Tamil)
கொஞ்ச காலத்திற்கு முன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள்கூட…
…. இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.
- உணவுத் துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும்.
நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயங்க வைத்தோம். பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற்கேற்றார்போல் மாற்றி ஓடச் செய்கிறோம்.
அதுபோல மனித எந்திரத்தையும் பெருந்தீனி மூலம் ஓடச் செய்யாமல், மின்சாரம் போன்ற சக்திப் பொருள் ஒன்று கண்டுபிடித்து [சிறிய உணவு] அதைக்கொண்டே மனிதனை இயக்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்யவேண்டும்.
மக்கள் பிறப்புக் கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழமுடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்குமேல் பெறமாட்டார்கள்.
[wpsm_testimonial]
ஆண், பெண் உறவுக்கும்-பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.
[/wpsm_testimonial]
பெரியார் பற்றிய புத்தகங்கள்
Periyar Quotes Tamil
பெண் விடுதலை , சாதி, சுயமரியாதை, அரசியல் பற்றிய பெரியாரின் பொன்மொழிகள் பார்க்க இங்கு சொடுக்கவும்…