ஊட்டி சுற்றுலா இடங்கள்
Places to Visit in Ooty
தமிழகத்தில் பிறந்த யாருக்கும் ஊட்டியை பற்றி தெறியாமல் இருக்க முடியாது, இருப்பினும் ஊட்டி சுற்றுலா இடங்கள் என்ன என்ன ! அதற்கு பயன செலவு, ஊட்டியில் தங்க்கும் விடுதி மேலும் இதற்கு எத்தனை நாட்கள் தேவைபடும் என சந்தேகம் உண்டு.
இதில் சிலர் ஊட்டிக்கு போய் இருக்கலாம், ஆனால பலர் ஊட்டிக்கு போக வேண்டும் என பல நாட்கள், ஏன், பல மாதங்ககளாக திட்டம் போட்டு, பல காரணங்ககளால் அந்த திட்டம் இன்று வரை திட்டமாக மட்டுமே இருக்கும்.
அப்படி போக முடியாமல் அல்லது இனிமேல்தான் ஊட்டி போக வேண்டும் என நிணைப்பவர்களுக்கும், மேலும் முன்னவே ஊட்டிக்கு சென்று சரியாக சுற்றி பார்க்கமல் இருப்பவர்களுக்கும் தான் இந்த பதிவு. அப்படி ஊட்டியில் சுற்றுலா இடங்கள் என்ன தான் இருக்கிறது என பார்ட்து விடலாம், வாருங்க்கள்.
ஊட்டியின் வரலாறு
நீலகிரி மலையில் உள்ள ஒரு அழகிய ஊர் தான் ஊட்டி. இதன் சிறப்பு பெயர் மலைகளின் ராணி என்றால் அது மிகை ஆகாது.
இங்கு வருடம் முழுவதும் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவதே இல்லை. ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள ‘புளூ மவுண்டைன்‘ எனப்படும் நீலகிரி மலைதான் ஊட்டிக்கு தனி அழகை சேர்க்கிறது.
நீலகிரி பெயர் காரணம்
நீலகிரி என்ற பெயருக்கு பலவகை கதைகள் உண்டு. இங்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் நீல நிற குறிஞ்சிப் பூ, பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிக்கும், எனவே இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.
ஊட்டி சுற்றுலா இடங்கள் என்றால் இந்த நீல நிற குறிஞ்சிப் பூ, பூத்துக் குலுங்கும் இடங்க்களை நினைக்காமல் இருக்க முடியாது.
மேலும், இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருக்கும், எனவே, இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. கிரி என்றால் மலை என பொருள்.
உதகம் என்ற சொல்லுக்கு தண்ணீர் என பொருள், மண்டலம் என்றால் வட்ட வடிவமாக அமைந்துள்ள தண்ணீர். எனவே உதகமண்டலம் என்பது இங்கிருக்கும் அதிகப்படியான ஏரிகளையும் நீர்ணிலைகளையும் குறிக்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது.
தொலைந்துபோன ஊட்டியின் வரலாறு
19ம் நூற்றண்டில், கிழக்கிந்திய கம்பேனி ஊட்டியை ஆக்கிரமிப்பதற்கு முன்பு, தோடர் குல மக்கள் இங்கு வசித்தது வந்தனர். இத்தகைய புகழ்பெற்ற சுற்றுலா தலத்திற்கு இதற்கு முந்திய சரியான பழைய வரலாறு நம்மிடம் இல்லை. காலனித்துவ ஆட்சி ஊட்டியின் கலாச்சாரம், கட்டமைப்பு போன்றவற்றில் ஆங்கில அரசின் தாக்கத்தை இன்றும் நம் வீடுகளில் வேடிக்கையாக, “ ஆமா இவங்க அப்படியே ஊட்டி காண்வெண்ட்’ல படிச்ச போலதா இங்கிலிசு பேசுராங்ககணு”, சொல்ல கேட்டு இருப்போம்.
ஊட்டியின் தட்ப வெட்ப நிலை விவசாய வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது, இன்று பெருமளவு காபி, தேயிலை தோட்டங்கள் இங்குள்ளன. இதுவே இன்று இவ்வூர் மக்களின் முதன்மை தொழிலாக உள்ளது. தொலைந்துபோன ஊட்டியின் வரலாறு ஊட்டியில் உள்ள சில கட்டடங்கள் அந்தக் கால வடிவமைப்புடன் இருப்பதால், இந்த ஊரே ஒரு பழமைத் தோற்றத்துடன், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஊட்டியின் வளர்ச்சி ஆங்கில ஆட்சியிலிருந்துத் தொடங்கியது எனலாம்.
மலைகளின் ராணி
ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர்கள், ஊட்டிக்கு ‘மலைப்பிரதேசங்களின் ராணி‘ என பெயர் சூட்டினார்கள். ஏனெனில், தென்னிந்தியாவின் பிற இடங்களில் இந்தியாவின் அதிகப்படியான வெப்பத்தை அனுபவித்த ஆங்கிலேயர்கள், ஊட்டியைப் பார்ர்தால் சும்மா விடுவார்களா !
கோயம்புத்தூர் to ஊட்டி: 85 கி,மீ
ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சுற்றுளா தலமாகும், இதனை சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். இதன் அருகே உள்ள விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.
ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட குளிரர் சற்று அதிகமே இருக்கும்..
ஊட்டி சுற்றுலா இடங்கள்
தொட்டபெட்டா மலைச் சிகரம் , பொடானிக்கல் கார்டன், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி அகியவை, உலகம் முழுவதும் இருந்து லட்ச கணக்கான சுற்றுலா பயணிகளை இங்கு இழுக்கிறது எனலாம்.
ஊட்டி சுற்றுலா இடங்கள் பட்டியல் இதோ…
ஊட்டி ஏரி

இது ஒரு செயற்கை ஏரி ஆகும், இதன் வடிவம் “ட” வடிவமைப்பில் உள்ளது. இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் தான் படகு இல்லம் அமைந்துள்ளது. இந்த ஏரி உதகையின் முதன்மை சுற்றுலாத் தலமாகும்.
இந்த ஏரியின் உன்மையான பரப்பளவு குறைந்துள்ளது, இதன் காரணம் இந்த ஏரிக்கு உட்பட்ட பகுதியில் தான் இப்போதைய பேருந்து நிலையம், குதிரைப் பந்தய மைதானம், மற்றும் ஏரி பூங்கா ஆகியவற்றை அமைத்துள்ளனர். ஊட்டி ஏரி 1973 இல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்வசம் வந்தது.
இந்த ஏரியைச் சுற்றி யூக்கலிப்டஸ் மரங்களாகவும், இதன் கரையில் தொடர்வண்டிப் பாதையும் செல்கிறது. கோடைக்காலமான மே மாதத்தில் படகுப் போட்டிகள் இங்கு 2 நாட்கள் நடத்தப்படுகின்றன
படகு இல்லம்

இந்த ஊட்டி ஏரியில் படகு இல்லம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் கட்டப்பட்ட்ள்ளது. படகு துறையில் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள், மிதி படகுகள் போன்றவை உள்ளன. இங்கு ஒரு பூங்காவும், அதில் ஒரு சிறிய தொடர்வண்டியும் சுற்றிவருகிறது, மேலும், சுற்றுலாத்துறையால் இங்கு ஒரு உணவகம் நடத்தப்படுகிறது. படகு இல்லம் முன்பு குதிரைவண்டி சவாரி வசதியும் உள்ளது.
பொம்மை ரயில் நிலையம்

இது ஊட்டியில் அழகான பகுதியாக உள்ளது. இதனை நீலகிரி மலை ரயில்பொம்மை நிலையம் என்று கூறுவர். ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் பயணிகளை ஈர்க்ககூடிய ஒரு சிறந்த இடமாக உள்ளது. 1899-ம் ஆண்டில் இருந்து பார்வையாளர்கள், காடுகள், சுரங்கப்பாதைகள், பழவகைகள், பனிமூட்டங்கள், பறவைகள் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர்.
இதன் உள்கூடத்தில், இந்திய ரயில்வே துறையின் பல்வேறு பரிணாமத்தை விளக்கும் புகைப்படங்களும் பல்வேறு நாடுகளில் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பை விளக்கும் போஸ்டர்களும் நிறைந்துள்ளன.
காந்தி காலத்தில் பயன்படுத்தப்பட்ட ” நீல் பால் டோக்கன்” முறையை பற்றி விவரிக்கும் காணொளிகளும் இங்கு உண்டு.
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சிக்னல்கள் போல அன்று எதுவும் இருக்கவில்லை. எனவே இரயில் விபத்துகளை தவிர்க்க, நீல் என்பவர் கண்டுபிடித்த பந்து போன்ற பொருள், ஒவ்வொரு ரயில் ஓட்டுநரிடமும் கொடுக்கப்படும். இந்த பந்துதான் அந்தப் பாதையில் செல்வதற்கான உரிமம். இந்த முறைதான் ரயில்வே துறையால் பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்தது.
ஒவ்வொரு நாளும் ஏராளமான மாணவர்கள் வந்துபோகும் இந்த அருங்காட்சியகம், வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த அருங்காட்சியகத்துக்கு, திங்கள் கிழமைகளில் மட்டும் விடுமுறை.
தாவரவியல் பூங்கா | Botanical Garden
இந்த பூங்கா(Botanical Gardens) 1848-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையால் பராமரிக்கப்பட்டுகின்றது. பல வகையான பூக்களையும், செடி கொடிகளையும், ஒழுங்கற்ற கிளை தண்டுகளையும், பூங்காவையும் கொண்ட வியக்க வைக்ககூடிய இடமாக உள்ளது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது.
இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார், 2,250 முதல் 2,500 மீட்டர்கள்.இங்கு வருடத்திற்க்கு 140 செ,மீ வரை மழை பெய்யும்.
இதன் அதிகப்பட்ச்ச வெப்பநிலை 28 °C ஆகவும் குறைந்த வெப்பநிலை 0 °C ஆகவும் உள்ளது.

இப்பூங்காவில் மூலிகைச்செடிகள், அழகான புதர்கள், பன்னம்(Ferns) என்று அழைக்கப்படும் ஒரு வகையான வெளிநாட்டு செடிகள், சீனவகையான பொன்சாய் மரங்கள் போன்ற ஆயிரக்கணக்கான செடிகொடிகளும், மரங்களும் உள்ளன.
இதன் மையப்பகுதியில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த மரம் ஒன்று உள்ளது. இதை பார்க்க மறக்காதீர்…
இத்தாலியப்பாணியில் அமைந்த பன்னம் படுக்கைகள், அடுக்கடுக்காக பூக்கும் தாவரங்கள், அல்லிகள் நிறைந்த குளம், ஆகியவை இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா பிரிவுகள்
ஊட்டி தாவரவியல் பூங்கா ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவை,

- கீழ்தள தோட்டம்
- மேல்தள அழகான நீருற்றுப்பகுதி,
- புதிய தோட்டம்,
- இத்தாலியன் தோட்டம்,
- கண்ணாடி வீடு,
- செடி வளர்ப்பகம் .
கீழ் தோட்டம்
கீழ் தோட்டத்தில் என்ற புல்வெளிகள் பச்சைப்போர்வை போல் காட்சி கொடுக்கிறது. தாய் நாட்டின் வரைபடத்தைக்குறிக்கும் வகையில் பல தாவரங்களைக்கொண்டு அமைக்கப்பட்ட காட்சி இங்கு பிறபலம்.
தைலம் மரம், போடோகார்பஸ் ரோடோடென்ரான், ஹெடேரோஃபைலா, போன்ற தாவர இனங்களும், செரட்டா மாக்னோலியா க்ரேண்டிப்லோரா, மாண்டனா போன்ற புல்வெளி இனங்களும் காணப்படுகிறது.
புதிய தோட்டம்
இத்தோட்டம் சமீபட்தில் தான் உறுவாக்கப்பட்டது. இத்தோட்டத்தில் பிறை போன்ற வடிவில் குளம் உள்ளது. 300க்கும் அதிகமான ரோஜா செடிகள் இங்கு உள்ளது.
கண்ணாடி வீடு
செடிகொடிகளை வளர்க்கும் அருமையான கண்ணாடிவீடு இங்கு 1912ம் ஆண்டில் கட்டப்பட்டது.
ஊட்டி ரோஜா பூங்கா

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஊட்டி ரோஜா பூங்கா 1995 இல் திறக்கப்பட்டது, ரோஜாக்ள் அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய இடமாக இது அமைந்துள்ளது. இங்கு வளரும் ரோஜாக்கள் சந்தையில் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றது.
- 20000 வகையான கலப்பின ரோஜாக்கள் இங்கு உள்ளன. இதன் அமைவிடம், ஊட்டி நகரத்தின் எல் ஹில் பள்ளத்தாக்கில் உள்ளது.
ரோஜாத்தோட்டத்தில் உள்ள நுழைவாயிலில் தமிழ்நாடு அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரிலே இங்கு ஒரு ரோஜா வகை பெயரிடப்பட்டுள்ளது, இதுவும் இங்கு ஒரு சிறப்பு.
நூல்களால் ஒரு பூங்கா
10 ஆயிரம் சதுர அடியில், முழுவதும் நூல் மலர்களால், உலகின் முதல் நூல் பூங்கா உதகையை அடுத்த படகு இல்லம் பகுதியில் அமைந்துள்ளது. இதனை வடிவமைத்தவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அண்டனி ஜோசப்.
ஊட்டி சுற்றுலா இடங்கள் பட்டியல்ல் இதுவும் ஒன்று, இங்கு மலர்கள், புல்வெளிகள், தாவரங்கள் என அனைத்தும் முழுவதும் நூல்களால் வடிவமைக்கப்பட்டவை என்றால் நம்பவே முடியத. ஆனால் உண்மை அதுதான். இதற்கு, 6 கோடி மீட்டர் நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.!!!!
இதுதொடர்பாக பூங்கா நிறுவனர் ஆண்டனி ஜோசப் கூறும்போது, “எனக்கு கலை மீது தீராத தாகம். ஓவியம், சிற்பம் வடிவமைத்துக் கொண்டிருந்தேன். கேரளாவில் 1980-களில் கோட்ஸ் வயலா லிமிடெட் நூல் நிறுவனம் சார்பில் நடந்த கண்காட்சியில், நூலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலைப் பொருட்களை காட்சிப்படுத்தினேன்.
அதற்கு கிடைத்த வரவேற்பும், அந்த நிறுவனத்தினர் அளித்த ஊக்கத்தாலும் இயந்திர உதவி இல்லாமல், கைகளைக் கொண்டே நூலைப் பயன்படுத்தி கலைப் பொருட்கள் தயாரிக்க முடிவு செய்தேன்.

1988-ம் ஆண்டு 9 உறுப்பினர்களைக் கொண்டு ஆய்வை தொடங்கினேன். மலர்கள் மற்றும் தாவரங்களை அவற்றின் அசல் தன்மை மாறாமல் வடிவமைக்க தொடங்கினேன் எங்கிறார்.
ஊட்டி மலை ரயில் பயணம்

ஊட்டி மலை ரயில் பயணம் உலக புகழ் பெற்றது . இதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுவர்.
ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்யாமல் ஊட்டி சுற்றுலா இடங்கள் முழுமை அடையாது.
மேட்டுபாளையம் முதல் குன்னூர் வரை சுமார் 23 கிமீ தொலைவுக்கு பல் சக்கரம் அமைக்கப்பட்ட பாதையில் 13 கிமீ வேகத்தில் ஊட்டி மலை ரயில் ஊர்ந்து செல்கிறது. இந்த ரயில்பெட்டிகளை பார்ப்பதற்கு பாம்பு ஊர்ந்து செல்வதுபோல மிகவும் ரம்மியமாக இருக்கும்.
மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள்
கோடை சீசன் நெருங்கும்நேரத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவர்.
சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பக்கூடியதாக மலை ரயில் பயணம் இருக்கும். இந்த ரயிலில் செல்லும்போது இயற்கை காட்சிகளை பார்த்துக்கொண்டே செல்லலாம். கோடை சீசன் நேரத்தில் அதிக கூட்டமாக இருக்கும், இருப்பினும் இதில் பயணம் செய்ய மக்கள் கூட்டம் தயராகவே இருப்பர்.
ஊட்டி மலை ரயில் வரலாறு
நீலகிரி மலை ரயில் அல்லது ஊட்டி மலை ரயில், இது மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854ம் ஆண்டு ஊட்டி மலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால் மலைப்பகுதி மிகவும் கரடுமுரடாக இருந்ததால் இந்தப் பணி நிருத்தப்பட்டு, பின்னர் 1891ம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.
உலகிலேயே இதுபோன்ற ரயில்வே சேவை ஓரு சில இடங்களில் தான் உள்ளன, அதில் ஒன்று தான் நம் தமிழகத்தில் உள்ளது என நாம் பெறுமை படலாம்.

இந்த ஊட்டி மலை ரயில், யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொட்டபெட்டா சிகரம்

ஊட்டி மலைகளின் உயர்ந்த சிகரமாக விளங்குகிறது. இது கடல்மட்டத்தலிருந்து 2,623மீ உயரத்தில் அமைந்துள்ளது. விரிவாக தொட்டபெட்டா சிகரம் பற்றி மேலும் படிக்க…
டால்பின் மூக்கு | Dolphin’s Nose
டால்பின் மூக்கு (Dolphin’s Nose) என்பது குன்னூரில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு கண்கவரும் மலை பகுதி, இங்கு நீண்டு கொண்டிருக்கிற பாறைகள் டால்பினின் மூக்க்கைப் போல இருக்கும். மலை ஏறுவதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

இது (Dolphin’s Nose) கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் கேத்தி அருவி பல மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அழகிய காச்சியை முழுமையான காணலாம். வளைந்த சாலைகளையும் , தேயிலைத் தோட்டங்களையும், பார்க்க இது ஒரு சிறந்த இடமாகும்.
குன்னூரில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்கள்
- லாம்ப் பாறை
- சிம்ஸ் பூங்கா
- துரூக் கோட்டை, குன்னூர்
- லாவ்ஸ் அருவி
- கடேரி அருவி
- லேடி கன்னிங்ஸ் சீட்
கல்ஹத்தி நீர்வீழ்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கல்லட்டி நீர் வீழ்ச்சியும் ஒன்று. உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் (ஊட்டியில் இருந்து 13 கி.மீ தொலவில்) கல்லட்டி மலைப்பாதையில் அமைந்துள்ளது.

இந்த நீர்வீழ்ச்சி, பறவைகளை பார்வையிட விருப்பமுடையவர்களுக்கு சொர்க்கமான இடமாக விளங்குகிறது. இதன் சுற்றுப்புறங்கள் அமைதியான மற்றும இயற்கையான சூழலை கொண்டுள்ளதால், இங்கு ஒரு சிறு பயணம் செல்ல சிறந்த இடமாக உள்ளது. பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் இடமாக கல்ஹத்தி நீர்வீழ்ச்சி உள்ளது.
எமரால்ட் ஏரி
எமரால்ட் ஏரி (Emerald Lake) , எமரால்டு கிராமத்தில் அமைதி பள்ளத்தாக்கு படகுதியில் அமைந்துள்ளது. அமைந்துள்ளது. இது உதகை நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு காணப்படும் பறவைகளாலும், ஏரியில் உள்ள பல்வேறு மீன்களாலும், எமரால்ட் ஏரி பிரபலமானது, இந்த ஏரியை சுற்றிலும் தேயிலை உற்பத்தி செய்யக்கூடிய இடமும், தேயிலை தோட்டமும், அமைந்துள்ளது. இங்கு பார்வையாளர்களால் தரமான தேயிலைப் பொருட்களை வாங்க முடியும். இந்த ஏரிக்கு அருகில் சூரியன் தோற்றத்தையும், மறைவையும் பார்ப்பது கண்ணுக்கினிய காட்சியாகும்.

ரெட் ஹில் இயற்கை விடுதி என்ற பெயரில் ஏரியின் பக்கத்தில் சுற்றுலாவாசிகளுக்காக ஒரு விடுதி உள்ளது. இந்த விடுதியில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது. விடுதியைச் சுற்றி தேயிலை தோட்டங்கள் சூழப்பட்ட அமைப்பில் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு விடுதி நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக மலையில் வண்டியோட்டுதல், பறவை நோக்குதல், ஏரியைச் சார்ந்த பகுதியில் மீன்பிடித்தல், வனநடை ஆகியவை அடங்கும்
புலிமலை

ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்களில் புலிமலையும் ஒன்று. தொட்டபெட்டாவின் அடிப்பகுதியில், ஊட்டியிலிருந்து கிழக்காக 6கி.மீ தொலைவில் புலிமலை அமைந்துள்ளது. மலை ஏறுவதற்கு இதுஒரு சிறந்த இடமாகவும் உள்ளது.
கோத்தகிரி
ஊட்டிக்கு அடுத்து 2-வது பெரிய மலைத்தொடர் கோத்தகிரி ஆகும். இது மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சுமார் 1793 மீட்டர் (5882 அடி) உயரத்தில் உள்ளது.
பிளாக் தண்டர் | Black Thunder
இது கோயமுத்தூர் அருகில், உதகை மலை அடிவாரத்தில், ஊட்டிக்கு செல்லும் பிராதன வழியில் அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் வகையில் பல்வேறு வகையான பொழுது போக்கு விளையாட்டுகள் அதிகம் உள்ளது.
Black Thunder, இது 75 acres பரப்பளவில் 50 வகையான விளையாட்டுக்களுடன் அமைந்துள்ளது. அவ்விளையாட்டுகளில் சில மலை சறுக்கு, வன ஆற்றுச் சவாரி போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இங்கு ஒரு உணவகமும் செயல்பட்டு வருகிறது.
இங்கு நமது பொருட்களை பாதுகாப்பதற்காக வைக்க ஒரு தனிப்பட்ட அறை இங்குள்ளது, மேலும் அனைத்து விளையாட்டுகளையும் கான வழிகாட்டி ஒருவரும் னமக்கு தேவைப்படின் உடன் வருவார்.இங்கு வருபவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
பிளாக் தண்டரிலிருந்து 4.1கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது மேட்டுபாளையம் இரயில் நிலையம்.
இதன் கட்டண விவரங்கள் மற்றும் இதைபற்றி மேலும் விவரங்களுக்கு Black Thunder…
அண்ணாமலை கோவில்

ஊட்டியிலிருந்து சுமார் 20கி.மீ தொலைவில் அண்ணாமலை கோவில் உள்ளது. இந்த மலைப்பகுதியிலுள்ள ஆய்வு மையம் பார்ப்பவர்களின் கண்களுக்கு அழகான காட்சியாக இருக்கும்.
துரூக் கோட்டை | Droog Fort
துரூக் கோட்டை என்பது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். இது மிகவும் பழமை வாய்ந்ததாகும். சமவெளியில் இருந்து 6000 அடி உயரத்தில் உள்ள இதன் வரலாற்று கூற்றின்படி, திப்புசுல்தான் காலத்டதில் பயன்படுத்திய புறக்காவல் நிலையமாகும்.,

இது குன்னூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதி அற்புதமான காட்சிகளாலால் நிறைந்திருப்பதால், துரூக் கோட்டையை காண்பதற்கு அதிக அளவில் மக்கள் வருகை புரிகின்றனர்.
லெம்ப் பாறை
ஊட்டியின் முக்கியமான இடங்களில் குன்னூரில் உள்ள லெம்ப் பாறையும் ஒன்றாகும். இது நீலகிரி மலைபிரதேசத்தை ஒட்டி இருக்கும். இங்கிருந்து கோயம்புத்தூர் சமவெளியை பார்க்கும் காட்சி மிக சிறப்பானது.
கேத்ரின் நீர்வீழ்ச்சி | Catherine Falls
250 அடி உயரத்தில் இருந்து விழக்கூடிய கேத்ரின் நீர்வீழ்ச்சி, மக்களை ஈர்க்கக்கூடிய ஒரு இடமாகும். சாலை வழியாகச் சென்றால் நீர்வீழ்ச்சியின் உச்சிப்பகுதி வரை செல்ல முடியும். இது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் அமைந்துள்ள ஓர் இரட்டை அருவியாகும். இது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து அரவேணு பிரிவு சாலையில் உள்ளது.

இந்த அருவி எம்.டி. கோக்பர்ன் என்பவரின் மனைவியின் பெயரில் வழங்கப்படுகின்றது. இவரால்தான் கோத்தகிரியில் காபி தோட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த அருவியை முழுமையாக “டால்பின் மூக்கு” என்ற பகுதியில் இருந்து பார்த்தால் தெரியும்.
பைக்காரா அருவி | Pykara waterfalls

உதகை அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஒரு ஆறானது பைக்காரா அருவியாக (Pykara waterfalls) உறுவெடுத்து 61 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் தொடர் அருவியாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இந்த அருவி ஊட்டி சுற்றுலா தளங்களில் பட்டியல் இருக்கிறது.

இந்த பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. இங்கு மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலாப் படகு நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
ஸ்டீபன் தேவாலயம்

1829-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது நீலகிரியிலுள்ள பழைமை வாய்ந்த தேவாலயம் ஆகும். இங்குள்ள புகைப்பட காச்சிகளும் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்கள், வரும் பார்வையாளர்களின் கண்களுக்கு சிறந்த விருந்தாகும்.
ஊட்டி சுற்றுலா இடங்கள்
[/vc_column_text]
ஊட்டி சுற்றுலா பயணம்
இதில் ஏதேனும் ஊட்டி சுற்றுலா இடங்கள் விடப்பட்டிருந்தால் கருத்தில் குறிப்பிடவும்.
நன்றி…