Description
Price: ₹ 49.00
(as of May 09,2020 20:36:48 UTC – Details)
உலகையே வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரோனா எனக்கும் பத்து நாள் விடுமுறையைக் கொடுத்தது. அந்த பத்து நாட்களில் சில புத்தகங்கள் வாசித்தேன், கொஞ்சம் எழுதினேன், நண்பர்களுடன் அரட்டை அடித்தேன், படங்கள் பார்த்தேன், குழந்தைகளுக்குக் கதைகள் சொன்னேன், கொஞ்சம் அதிக நேரம் வீட்டிற்குப் பேசினேன். இப்படி விரும்பியபடி பொழுதை போக்கிக்கொண்டிருந்தேன். இந்த கொரோனா காலத்து விடுமுறையைப் பயனுள்ளதாக, மறக்க முடியாதபடி செய்தால் என்ன என்ற எண்ணம் வந்தபோது நாம் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போடலாம் என்று தோன்றிற்று அதன் வெளிப்பாடே இந்த "சில முத்துக்கள்."
நான் வாசித்த புத்தகங்கள் தான் எழுத வேண்டும் எனும் ஆசையை என்னுள் விதைத்தது, அது பட்டுப்போகாமல் வளர எனக்குதவி ஆசானாகவும் இருந்து வழிநடத்தியது. வாழ்வின் கடினமான பொழுதுகளைக் கடந்து போக வைத்தது. தனிமையைத் துரத்தி நானிருக்கிறேன் உனக்குத் துணையாக என உடனிருந்தது எனை ஊக்கப்படுத்தியது. மனதின் காயங்களை மயிலிறகால் வருடிக் குணப்படுத்தியது. தனிமையை ரசிக்க வைத்தது. என்னைப் பலநேரம் எனக்கே அடையாளம் காட்டியது. வேலை, குடும்பம், குழந்தைகள், வீடு இதைத் தாண்டிய ஓர் அற்புத உலகை அறிமுகப்படுத்தி எல்லையில்லா இன்பத்தைக்கொடுத்தது.
அவற்றுள் சில விலைமதிப்பில்லா முத்துக்களை உங்களுக்கும் நான் இப்புத்தகம் மூலம் அறிமுகப்படுத்தப்போகிறேன். நீங்கள் அறிந்துகொண்ட எழுத்தாளர்களுடன் புதியதாய் சில எழுத்தாளர்களையும் இந்த புத்தகம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். இதில் நீங்கள் வாசித்திருக்கும் புத்தகங்களும் இருக்கும் அவை ஒரு வாசகனின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்.

சில முத்துக்கள்: silla muththukkal (Tamil Edition)
There are no reviews yet.