Description
Price: ₹ 109.25
(as of May 01,2020 12:22:44 UTC – Details)
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
உலகம் முழுவதிலும் உள்ள திபெத்தியர்களின் ஆன்மிக குருவாகவும் அரசியல் தலைவராகவும் திகழும் தலாய் லாமா, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் ஓர் அகதியாக வாழ்ந்து வருகிறார். அகிம்சையை, அன்பை, சகோதரத்துவத்தை, அமைதியை விடாப்பிடியாகப் போதித்துவரும் அவர் வாழ்வில்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்!
இந்த நிமிடம்வரை சீனா, தலாய் லாமாவை அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை தலாய் லாமா ஒரு பிரிவினைவாதி, சூழ்ச்சிக்காரர், நாட்டை உடைப்பவர், சீன எதிர்ப்பு எண்ணங்களை இளைஞர்களிடம் விதைப்பவர். நோபல் பரிசு அளித்து உலகமே கொண்டாடும் தலாய் லாமாவை சீனா கிட்டத்தட்ட ஒரு கிரிமனலாகவே பாவிக்கிறது. பரஸ்பர அமைதிக்கான இரு தரப்பு முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.
இந்த நிமிடம்வரை, திபெத்தை ஒரு சுதந்தர நாடாக சீனா ஏற்கவில்லை. திபெத் சீனாவின் பிரிக்கவியலாத ஓர் அங்கம் என்றே சொல்லிவருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உள்பட திபெத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ள எந்தவொரு நாடும் திபெத் விடுதலைக்காகப் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. சீனாவை ஒரு பகை நாடாகக் கருதுபவர்களால் கூட திபெத்துக்குச் சாதகமாகவும் தலாய் லாமாவுக்குச் சாதகமாகவும் எதுவும் செய்யமுடியாத நிலையே நீடிக்கிறது.
இந்தப் புத்தகம் தலாய் லாமாவின் அரசியல், ஆன்மிக வாழ்வையும் திபெத்தின் வரலாற்றையும், நேரு தொடங்கி இன்றுவரையிலான திபெத் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் ஒருங்கே பதிவு செய்கிறது. தலாய் லாமாவின் போராட்டத்தின்மீதும் திபெத்தின் சுதந்தரத்தின்மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு இது.
Dalai Lama (Tamil)
There are no reviews yet.