SillaRai Varthagam – சில்லறை வர்த்தகம்: A to Z Book on Retailing – பல்நோக்குப் பார்வை (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

99.00

SillaRai Varthagam – சில்லறை வர்த்தகம்: A to Z Book on Retailing – பல்நோக்குப் பார்வை (Tamil Edition)-eBook
SillaRai Varthagam – சில்லறை வர்த்தகம்: A to Z Book on Retailing – பல்நோக்குப் பார்வை (Tamil Edition)-eBook

99.00

Description

Price: ₹ 99.00
(as of May 04,2020 00:13:32 UTC – Details)

- 1

சில்லறை வர்த்தகத்தைப் பற்றிய முழுமையான புத்தகம் இது. அ-புனைவு என்றாலும், ஒரே ஒரு இடத்தில், கொள்முதல் செய்வதில் மேலாண்மை – எஸ்சிஎம் எனப்படும் சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட் – பற்றி எளிதில் புரிந்து கொள்வதற்காக ஒரு கற்பனைப் பாத்திரத்தை உலவ விட்டிருக்கிறேன. எஸ்கேயூ என்றால் என்ன, ஸ்டாக் என்றால் என்ன என்பதை எல்லாம் எளிய உதாரணங்களுடன் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
இந்திய நிகழ்வுகளில் இருந்து அதிக உதாரணங்களையும், உண்மை நிகழ்ச்சிகளையும் இதில் காணலாம். அதிகம் பேசப்படாத மார்கெட்டிங்கில் பொசிஷனிங், எஸ்பினாஜ் எனப்படும் வேவு பார்த்தல் போன்ற சுவாரஸ்யமான தகவல்களையும், சேர்த்திருக்கிறேன். விற்பனை நுணுக்கங்கள், தரமான வாடிக்கையாளர் சேவை மட்டுமல்லாமல், கன்ஸ்யூமர் நீதிமன்றங்களையும் என் சொந்த அனுபவங்களுடன் விளக்கி இருக்கிறேன்.
நிறுவனத்துக்குப் பெயர் வைப்பதற்கும் சில விதிகளும், என்னென்ன பெயர்கள் வைக்கக் கூடாது என்ற சட்டக் கட்டுப்பாடுகளும் இருக்கினறன. அவற்றுடன், ஜிஎஸ்டி வரியின் தாக்கம் பற்றியும், மின்வர்த்தகம் பற்றியெல்லாம்கூட இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் உரலிகளை (லிங்க்) உபயோகித்து, குறிப்பிட்ட இணய தளங்களில் கூடுதல் தகவல்களும் பெறலாம்.
ஏற்கனவே 2014 டிசம்பரில், மதி நிலையம் இந்த நூலை அச்சுப் புத்தகமாக, மிகச் சிறப்பாகப் பதிப்பித்தது. வெளிவந்து, புத்தகக் கண்காட்சிகளிலும் பெரும் வரவேற்பு பெற்ற நூல் இது. இந்தப் புத்தகத்துக்கு, ஃபேஸ்புக்கில் வெளியான மதிப்புரைகளில், இரண்டின் சுட்டிகள் கீழே:
https://www.facebook.com/mayavarathaan/posts/10204919956272327?notif_t=mention
https://www.facebook.com/mannairvs/posts/10152730415657545?comment_id=10152731030352545&notif_t=mentions_comment
நீங்கள் சிறுவியாபாரியாக, அல்லது பெரிய வர்த்தக நிறுவனராக இருக்கலாம்; வர்த்தக நிறுவனத்தின் ஏதாவது ஒரு பிரிவில் பணி செய்பவராக இருக்கலாம்; ஒரு மாணவராக இருக்கலாம்; அல்லது சுய தொழில் செய்பவராக இருக்கலாம். கல்லூரிகளில் ஆசிரியராகவோ,வர்த்தக நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் பொறுப்பிலோ இருக்கலாம். நீங்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் உங்கள் நிலையிலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்றம் காண விரும்புவீர்கள். அதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டும்.
வாடிக்கையாளர்களுக்கும் இந்தப் புத்தகத்தில் பல அரிய தகவல்கள் இருக்கின்றன. வர்த்தகம் செழிக்கவும், வாடிக்கையாளர் மகிழவும் இந்தப் புத்தகம் துணை நிற்கும்.
வர்த்தகச்சந்தை பற்றியும், அதன் முக்கிய உறுப்பினர்களான வர்த்தகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், போட்டியாளர், வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, அரசாங்க சட்டங்கள் பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் இந்த நூல் விளக்குகிறது. மற்ற துறையினருக்கும் – அவர்கள் ரியல் எஸ்டேட் காரர்கள் என்றாலும். கட்டட வல்லுநர்கள் என்றாலும்; விளம்பரத்துறை, ஊடகத்துறை, வங்கித்துறை என்று இருந்தாலும் ஆடிட்டர் அல்லது வக்கீல் என்றாலும், சில்லறை வர்த்தகம் மிகப்பெரிய வாய்ப்புகளையும், வசதிகளையும் கொடுக்கிறது. எப்படி என்றும் இந்த நூல் பேசும்.
டெய்ல்பீஸ் என்ற தலைப்பில், அநேகமாக எல்லா அத்தியாயங்களின் கடைசியிலும் சில சொந்த அனுபவங்களையும், சுவாரஸ்யமான தகவல்களையும் தந்திருக்கிறேன். அதென்ன டெய்ல்பீஸ்? அது ஒரு ஆங்கில வார்த்தை. முத்தாய்ப்பாக சொல்லப்படுவது; அது அத்தியாயத்தில் சொல்லப்படும் மையக்கருத்துக்கு வலு சேர்க்கலாம். அல்லது முற்றிலும் புதிய கோணமாகவும் இருக்கலாம். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.



SillaRai Varthagam – சில்லறை வர்த்தகம்: A to Z Book on Retailing – பல்நோக்குப் பார்வை (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “SillaRai Varthagam – சில்லறை வர்த்தகம்: A to Z Book on Retailing – பல்நோக்குப் பார்வை (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: