நிலா நிலா வாவா – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

நிலாநிலா வாவாநில்லாமே ஓடிவாமலைமேலே ஏறிவாமல்லிகைப்பூக் கொண்டுவா.நடுவீட்டில் வையேநல்ல துதி செய்யேவெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறுஅள்ளியெடுத்து அப்பன் வாயில்கொஞ்சிக் கொஞ்சி யூட்டுகுழந்தைக்குச் சிரிப்புக் காட்டு எட்டிஎட்டிப் பார்க்கும்வட்ட வட்ட நிலாவேதுள்ளித்துள்ளிச் சிரிக்கும்தும்பைப்பூவு நிலாவே குழந்தை பாடல்கள் – தமிழ் DNA நிலா நிலா வாவா

மாம்பழமாம் மாம்பழம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம். குழந்தை பாடல்கள் – தமிழ் DNA மாம்பழமாம் மாம்பழம்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுசாயக்கிளியே சாய்ந்தாடுஅன்னக்கிளியே சாய்ந்தாடுஆவாரம்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயில் புறாவே சாய்ந்தாடுமயிலே குயிலே சாய்ந்தாடுமாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுதாமரைப்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயிற் புறாவே சாய்ந்தாடுபச்சைக்கிளியே சாய்ந்தாடுபவழக்கொடியே சாயந்தாடுசோலைக்குயிலே சாய்ந்தாடுசுந்தரமயிலே சாய்ந்தாடுகண்ணே மணியே சாய்ந்தாடுகற்பகக் கொடியே சாய்ந்தாடுகட்டிக் கரும்பே சாய்ந்தாடுகனியே பாலே சாய்ந்தாடு. குழந்தை பாடல்கள் – தமிழ் DNA சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

மியாவ் மியாவ் பூனைக்குட்டி – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டி பளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் இரண்டுவெளிச்சம் போடும் விழி கண்டுவிரைந்தோடும் எலியும் மிரண்டு விரித்த பூவைக் கவிழ்த்ததுபோலவிளங்கும் பூனைக் காலடிகள்இருந்து தவ்வ ஏற்றபடிஇயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள் அழகு வண்ணக் கம்பளி யால்ஆடை உடுத்தி வந்தது போல்வளர்ந்து முடியும் பலநிறத்தில்வந்து தாவும் பூனைக்குட்டி விரட்டி விலங்கினைக் காட்டிலேவீரங் காட்டும் புலியினமேதுரத்தி எலியை வீட்டினிலேதொல்லை தீர்க்கும் பூனை தினமே குழந்தை பாடல்கள் – தமிழ்

கைவீசம்மா கைவீசு – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

கைவீ சம்மா கைவீசுகடைக்குப் போகலாம் கைவீசுமிட்டாய் வாங்கலாம் கைவீசுமெதுவாய்த் தின்னலாம் கைவீசு அப்பம் வாங்கலாம் கைவீசுஅமர்ந்து தின்னலாம் கைவீசுபூந்தி வாங்கலாம் கைவீசுபொருந்தி யுண்ணலாம் கைவீசுபழங்கள் வாங்கலாம் கைவீசுபரிந்து புசிக்கலாம் கைவீசு சொக்காய் வாங்கலாம் கைவீசுசொகுசாய்ப் போடலாம் கைவீசுகோயிலுக்குப் போகலாம் கைவீசுகும்பிட்டு வரலாம் கைவீசுதேரைப் பார்க்கலாம் கைவீசுதிரும்பி வரலாம் கைவீசுகம்மல் வாங்கலாம் கைவீசுகாதில் மாட்டலாம் கைவீசு. குழந்தை பாடல்கள் – தமிழ் DNA கைவீசம்மா கைவீசு

அம்மா இங்கே வா! வா! – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

அம்மா இங்கே வா! வா!ஆசை முத்தம் தா! தா!இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லைஐயமின்றி சொல்லுவேன்ஒற்றுமை என்றும் பலமாம்ஓதும் செயலே நலமாம்ஔவை சொன்ன மொழியாம்அஃதே எனக்கு வழியாம். குழந்தை பாடல்கள் – தமிழ் DNA அம்மா இங்கே வா! வா!

மரம் வளர்ப்போம்! – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

தாத்தா வைத்த தென்னையுமே,தலையால் இளநீர் தருகிறது! பாட்டி வைத்த கொய்யாவும்,பழங்கள் நிறைய கொடுக்கிறது! அப்பா வைத்த மாஞ்செடியும்,அல்வா போல பழம் தருது! அம்மா வைத்த முருங்கையுமேஅளவில்லாமல் காய்க்கிறது! அண்ணன் வைத்த மாதுளையும்,கிண்ணம் போல பழுக்கிறது! சின்னஞ்சிறுவன் நானுமொருசெடியை நட்டு வளர்ப்பேனே…. குழந்தை பாடல்கள் – தமிழ் DNA மரம் வளர்ப்போம்!

பூனை அண்ணா – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் குடிக்கும்நாற்காலியின் கீழ் படுக்கும் குழந்தை பாடல்கள் – தமிழ் DNA பூனை அண்ணா

பொம்மை பார் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை பார் எனக்குக் கிடைத்த பொம்மை போல்எதுவும் இல்லை உலகிலே குழந்தை பாடல்கள் – தமிழ் DNA பொம்மை பார்

யானை பெரிய யானை – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

யானை பெரிய யானையார்க்கும் அஞ்சா யானைபானை வயிற்று யானைபல்லைக் காட்டா யானைமுறத்தைப் போல காதுமுன்னால் வீசும் யானைசிறிய கோலி குண்டாம்சின்ன கண்கள் யானைமுன்னங்காலை மடக்கிமுட்டி போட்டு படுக்கும்சின்ன குழந்தை ஏற்றிசிங்காரமாய் நடக்கும் குழந்தை பாடல்கள் – தமிழ் DNA யானை பெரிய யானை

எவரையும் ஏளனம் நீ செய்யாதே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மனிதர் வெறுக்கும் சேற்றிலேமலர்ந்து நிற்கும் தாமரை;புனிதமான கடவுளைபூசை செய்ய உதவுதே! அழுக்கடைந்த சிப்பியில்அழகு முத்தைக் காணலாம்;கழுத்தில் நல்ல மாலையாய்கட்டி மகிழ உதவுதே! கன்னங்கரிய குயிலிடம்காது குளிரும் கீதமோ;இன்பம் இன்பம் என்றுதாம்இன்னும் கேட்க செய்யுதே! விசத்தில் மிக்க பாம்பிடம்விலையுயர்ந்த இரத்தினம்;அடடா அந்த இரத்தினம்மனிதருக்கும் கிட்டுமோ? ஊசி போன்ற முள்ளிலேஉயர்ந்த ரோசா மலருதே;வீசி நல்ல மணத்திலேவிரும்பி அணிய செய்யுதே! மோசமான இடத்திலும்மிகுந்த நல்ல பொருளுண்டு;யோசிக்காமல் எவரையும்ஏளனம் நீ செய்யாதே! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA எவரையும் ஏளனம் நீ

வானம் கறுத்தால் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

வானம் கறுத்தால், மழை பெய்யும்மழை பெய்தால், மண் குளிரும்மண் குளிர்ந்தால், புல் தழைக்கும்புல் தழைத்தால், பசு மேயும்பசு மேய்ந்தால், பால் சுரக்கும்பால் சுரந்தால்,கன்று குடிக்கும்கன்று குடித்து மிஞ்சியதைகறந்து நாமும் வந்திடலாம்;காய்ச்சி நாமும் குடித்திடலாம் குழந்தை பாடல்கள் – தமிழ் DNA வானம் கறுத்தால்

தென்னை மரத்து – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

தென்னை மரத்து இளநீரூ -நல்லதேன்போல இனிக்கும் சுவைநீருஎன்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்ஏற்றுக் குடித்தால் நலம் தருமே! பானத்தில் இளநீர் அரியவகை -எந்தகாலமும் நமக்கு நல்ல துணைவிலையோ ஒன்றும் அதிகமில்லை -இங்குஇதுபோல் பானம் வேறு இல்லை. இயற்கை தந்தது இளநீரு -நல்லஇன்சுவை தந்திடும் இளநீருஉடலின் வெப்பம் தணித்திடுமே -நம்உள்ளம் தனிலே நிறைந்திடுமே! கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே -நம்அனைவரின் தாகம் தீர்த்திடுமே!அனைவரும் நாளும் குடித்திடலாம் -வரும்ஆனந்தம் தனிலே திளைத்திடலாம்! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA தென்னை மரத்து

மயிலே மயிலே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்! பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி நடந்துவாசட்டை போட்டு விடுகிறேன்! ஓடைக் கொக்கு இங்கே வாஓடிப் பிடித்து ஆடலாம்!மாடப் புறாவே இறங்கிவாமடியில் குந்திப் பேசலாம்! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA மயிலே மயிலே

பள்ளிக் கூடம் போகலாமே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

பள்ளிக் கூடம் போகலாமேசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாமேசின்ன பாப்பா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்சின்ன பாப்பா -கல்வித்தோட்டம் அந்த பள்ளிக் கூடம்சின்ன பாப்பா! பள்ளிக் கூடம் திறந்தாச்சிசின்ன பாப்பா -உனக்குநல்ல நேரம் பிறந்தாச்சிசின்ன பாப்பா! வீட்டுச் செய்தி கதைகள் பேசிபொழுது போக்கலாம் -அடஏட்டுக் கல்வி பாடம் கூடஎழுதிப் பார்க்கலாம்! உடலும் மனமும் வளர்வதற்குசின்ன பாப்பா -ஏற்இடமே இந்தப் பள்ளிக் கூடம்சின்ன பாப்பா! பள்ளிக் கூடம் போகலாம் வாசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாம் வாசின்ன பாப்பா! குழந்தை

ஆனை ஆனை அழகர் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

ஆனை ஆனைஅழகர் ஆனை அழகரும் சொக்கரும்ஏறும் ஆனை கட்டிக்கரும்பைமுறிக்கும் ஆனை காவேரி தண்ணீரைகலக்கும் ஆனை குட்டி ஆனைக்குக்கொம்பு முளைச்சுதாம் பட்டணமெல்லாம்பறந்தோடிப் போச்சுதாம்! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA ஆனை ஆனை அழகர்

கூடி வாழ்வோம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சு பசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..! எங்கிருக்கும் பறவையும்எகிறிப் பறந்து வந்துச்சு இனத்தின் குரலைக் கேட்டுச்சுஇறங்கி வந்து பார்த்துச்சு..! கோமாதா நமக்கு எல்லாம்குடிக்க பாலும் தந்துச்சு கூடி நாமும் கூட்டம் போட்டு`அன்னை’ யென்று சொல்லுச்சு..! பாதுகாக்கும் தாயாகபட்டி தொட்டி சொல்லுது சாதுவாக இருந்த அதுவும்சினந்து காடு வெல்லுது..! பறவைக் கூட்டம் நாமெல்லாம்போற்றி அதை வணங்குவோம் சிறகாய்