திருவாசகம் – அச்சோ பதிகம்
அச்சோ பதிகம் (தில்லையில் அருளியது) முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக்