- 1

திருவாசகம் -திருத்தெள்ளேணம்

Posted by - ஏப்ரல் 12, 2020

திருத்தெள்ளேணம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. அவமாய

- 3

திருவாசகம் -திருக்கோத்தும்பி

Posted by - ஏப்ரல் 12, 2020

திருக்கோத்தும்பி சிவனோடு ஐக்கியம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 4 நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 8 தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்

- 5

திருவாசகம் -திருப்பொற் சுண்ணம்

Posted by - ஏப்ரல் 11, 2020

திருப்பொற் சுண்ணம் ஆனந்த மனோலயம் (தில்லையில் அருளியது – அறுசீர் ஆசிரிய விருத்தம்) முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடுபல்லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன் ஐயாறன்அம்மானைபாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 8 பூவியல் வார்சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறநிலாமே குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் தேவியுந் தானும்வந்தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம்

- 7

திருவாசகம் -திருவம்மானை

Posted by - ஏப்ரல் 11, 2020

திருவம்மானை (திருவண்ணாமலையில் அருளியது – சக்தியை வியந்தது) (வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா) ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155 பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ

- 9

திருவாசகம் -திருவெம்பாவை

Posted by - ஏப்ரல் 11, 2020

திருவெம்பாவை (திருவண்ணாமலையில் அருளியது – சக்தியை வியந்தது) (வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா) ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155 பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ

- 11

திருவாசகம் -நீத்தல் விண்ணப்பம்

Posted by - ஏப்ரல் 11, 2020

நீத்தல் விண்ணப்பம் (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105 கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார்

- 13

திருவாசகம் -திருச்சதகம்

Posted by - ஏப்ரல் 11, 2020

திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5 கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருஅருளாலே இருக்கப்

- 15

திருவாசகம் -போற்றித் திருவகவல்

Posted by - ஏப்ரல் 11, 2020

போற்றித் திருவகவல் (தில்லையில் அருளியது – நிலைமண்டில ஆசிரியப்பா) நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர் அடியாலே மூவுலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 யானை

- 17

திருவாசகம் -திருவண்டப் பகுதி

Posted by - ஏப்ரல் 11, 2020

திருவண்டப் பகுதி (தில்லையில் அருளயது – இணைக் குறள் ஆசிரியப்பா) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன இல்நுழை கதிரின் நுன் அணுப் புரையச் 5 சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10 எறியது

- 19

திருவாசகம் -கீர்த்தித் திரு அகவல்

Posted by - ஏப்ரல் 11, 2020

கீர்த்தித் திரு அகவல் (தில்லையில் அருளியது – நிலைமண்டில ஆசிரியப்பா) தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் ⁠5 என்னுடை இருளை ஏறத்துரந்தும் அடியார் உள்ளத்து அன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் ⁠10 கல்லா டத்துக் கலந்து இனிது அருளி

- 21

திருவாசகம் -சிவபுராணம்

Posted by - ஏப்ரல் 11, 2020

சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ⁠10