60 பரி நரியாகிய படலம்
திருவிளையாடற் புராணம் 60 பரி நரியாகிய படலம் 60 பரி நரியாகிய படலம் கட்டி வைத்த பரிகள் அன்று இரவு உரு மாறின; கொட்டி வைத்த கொள்ளும் புல்லும் தின்னாமற் கிடந்தன. பரிகள் நரிகள் ஆயின. காட்டில் திரிந்து கொண்டிருந்த தம்மை இப்படிக் குதிரைகளாகக் கட்டிப் போட்டார்களே என்று அவை வருந்தின. நத்தையும் நண்டும் தின்று பழகிய தமக்கு இந்தச் சொத்தைப்புல்லைப் போட்டு வாட்டினார்களே என்று வேதனைப்பட்டன. எப்பொழுது விடுதலை பெறுவோம் என்று காத்துக் கிடந்தன. கட்டிய