நிலா நிலா வாவா – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

நிலாநிலா வாவாநில்லாமே ஓடிவாமலைமேலே ஏறிவாமல்லிகைப்பூக் கொண்டுவா.நடுவீட்டில் வையேநல்ல துதி செய்யேவெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறுஅள்ளியெடுத்து அப்பன் வாயில்கொஞ்சிக் கொஞ்சி யூட்டுகுழந்தைக்குச் சிரிப்புக் காட்டு எட்டிஎட்டிப் பார்க்கும்வட்ட வட்ட நிலாவேதுள்ளித்துள்ளிச் சிரிக்கும்தும்பைப்பூவு நிலாவே குழந்தை பாடல்கள் – தமிழ் DNA நிலா நிலா வாவா

மாம்பழமாம் மாம்பழம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம். குழந்தை பாடல்கள் – தமிழ் DNA மாம்பழமாம் மாம்பழம்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுசாயக்கிளியே சாய்ந்தாடுஅன்னக்கிளியே சாய்ந்தாடுஆவாரம்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயில் புறாவே சாய்ந்தாடுமயிலே குயிலே சாய்ந்தாடுமாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுதாமரைப்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயிற் புறாவே சாய்ந்தாடுபச்சைக்கிளியே சாய்ந்தாடுபவழக்கொடியே சாயந்தாடுசோலைக்குயிலே சாய்ந்தாடுசுந்தரமயிலே சாய்ந்தாடுகண்ணே மணியே சாய்ந்தாடுகற்பகக் கொடியே சாய்ந்தாடுகட்டிக் கரும்பே சாய்ந்தாடுகனியே பாலே சாய்ந்தாடு. குழந்தை பாடல்கள் – தமிழ் DNA சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

மியாவ் மியாவ் பூனைக்குட்டி – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டி பளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் இரண்டுவெளிச்சம் போடும் விழி கண்டுவிரைந்தோடும் எலியும் மிரண்டு விரித்த பூவைக் கவிழ்த்ததுபோலவிளங்கும் பூனைக் காலடிகள்இருந்து தவ்வ ஏற்றபடிஇயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள் அழகு வண்ணக் கம்பளி யால்ஆடை உடுத்தி வந்தது போல்வளர்ந்து முடியும் பலநிறத்தில்வந்து தாவும் பூனைக்குட்டி விரட்டி விலங்கினைக் காட்டிலேவீரங் காட்டும் புலியினமேதுரத்தி எலியை வீட்டினிலேதொல்லை தீர்க்கும் பூனை தினமே குழந்தை பாடல்கள் – தமிழ்

கைவீசம்மா கைவீசு – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

கைவீ சம்மா கைவீசுகடைக்குப் போகலாம் கைவீசுமிட்டாய் வாங்கலாம் கைவீசுமெதுவாய்த் தின்னலாம் கைவீசு அப்பம் வாங்கலாம் கைவீசுஅமர்ந்து தின்னலாம் கைவீசுபூந்தி வாங்கலாம் கைவீசுபொருந்தி யுண்ணலாம் கைவீசுபழங்கள் வாங்கலாம் கைவீசுபரிந்து புசிக்கலாம் கைவீசு சொக்காய் வாங்கலாம் கைவீசுசொகுசாய்ப் போடலாம் கைவீசுகோயிலுக்குப் போகலாம் கைவீசுகும்பிட்டு வரலாம் கைவீசுதேரைப் பார்க்கலாம் கைவீசுதிரும்பி வரலாம் கைவீசுகம்மல் வாங்கலாம் கைவீசுகாதில் மாட்டலாம் கைவீசு. குழந்தை பாடல்கள் – தமிழ் DNA கைவீசம்மா கைவீசு

அம்மா இங்கே வா! வா! – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

அம்மா இங்கே வா! வா!ஆசை முத்தம் தா! தா!இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லைஐயமின்றி சொல்லுவேன்ஒற்றுமை என்றும் பலமாம்ஓதும் செயலே நலமாம்ஔவை சொன்ன மொழியாம்அஃதே எனக்கு வழியாம். குழந்தை பாடல்கள் – தமிழ் DNA அம்மா இங்கே வா! வா!

மரம் வளர்ப்போம்! – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

தாத்தா வைத்த தென்னையுமே,தலையால் இளநீர் தருகிறது! பாட்டி வைத்த கொய்யாவும்,பழங்கள் நிறைய கொடுக்கிறது! அப்பா வைத்த மாஞ்செடியும்,அல்வா போல பழம் தருது! அம்மா வைத்த முருங்கையுமேஅளவில்லாமல் காய்க்கிறது! அண்ணன் வைத்த மாதுளையும்,கிண்ணம் போல பழுக்கிறது! சின்னஞ்சிறுவன் நானுமொருசெடியை நட்டு வளர்ப்பேனே…. குழந்தை பாடல்கள் – தமிழ் DNA மரம் வளர்ப்போம்!

பூனை அண்ணா – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் குடிக்கும்நாற்காலியின் கீழ் படுக்கும் குழந்தை பாடல்கள் – தமிழ் DNA பூனை அண்ணா

பொம்மை பார் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை பார் எனக்குக் கிடைத்த பொம்மை போல்எதுவும் இல்லை உலகிலே குழந்தை பாடல்கள் – தமிழ் DNA பொம்மை பார்

யானை பெரிய யானை – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

யானை பெரிய யானையார்க்கும் அஞ்சா யானைபானை வயிற்று யானைபல்லைக் காட்டா யானைமுறத்தைப் போல காதுமுன்னால் வீசும் யானைசிறிய கோலி குண்டாம்சின்ன கண்கள் யானைமுன்னங்காலை மடக்கிமுட்டி போட்டு படுக்கும்சின்ன குழந்தை ஏற்றிசிங்காரமாய் நடக்கும் குழந்தை பாடல்கள் – தமிழ் DNA யானை பெரிய யானை

விடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசாஅருமைமேகம் நமதுகுடை – ஐலசாபாயும் புயல் நம்ஊஞ்சல் – ஐலசாபனிமூட்டம் உடல்போர்வை – ஐலசாகாயும் ரவிச்சுடர்கூரை – ஐலசாகட்டுமரம் வாழும் வீடு – ஐலசாமின்னல்வலை அரிச்சுவடி – ஐலசாபிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள் – ஐலசாமின்னல் இடிகாணும் கூத்து – ஐலசாவெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசாமுழுநிலாதான் கண்ணாடி – ஐலசாமூச்சடக்கி நீந்தல் யோகம் – ஐலசாதொழும் தலைவன் பெருவானம் – ஐலசாதொண்டு தொழிலாளர் நாங்கள்

எவரையும் ஏளனம் நீ செய்யாதே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மனிதர் வெறுக்கும் சேற்றிலேமலர்ந்து நிற்கும் தாமரை;புனிதமான கடவுளைபூசை செய்ய உதவுதே! அழுக்கடைந்த சிப்பியில்அழகு முத்தைக் காணலாம்;கழுத்தில் நல்ல மாலையாய்கட்டி மகிழ உதவுதே! கன்னங்கரிய குயிலிடம்காது குளிரும் கீதமோ;இன்பம் இன்பம் என்றுதாம்இன்னும் கேட்க செய்யுதே! விசத்தில் மிக்க பாம்பிடம்விலையுயர்ந்த இரத்தினம்;அடடா அந்த இரத்தினம்மனிதருக்கும் கிட்டுமோ? ஊசி போன்ற முள்ளிலேஉயர்ந்த ரோசா மலருதே;வீசி நல்ல மணத்திலேவிரும்பி அணிய செய்யுதே! மோசமான இடத்திலும்மிகுந்த நல்ல பொருளுண்டு;யோசிக்காமல் எவரையும்ஏளனம் நீ செய்யாதே! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA எவரையும் ஏளனம் நீ

மார்கழி மாசத்திலேதான் – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020

மார்கழி மாசத்திலேதான் – கண்ணே நீமாராசாவைப் பார்க்கையிலேதைப் பொங்கல் காலத்திலே – கண்ணே நீதயிரும், சோறும் திங்கையிலேமாசி மாசக் கடைசியிலே – கண்ணே நீமாமன் வீடு போகையிலேபங்குனி மாசத்திலே – கண்ணே நீபங்குச் சொத்தை வாங்கையிலேசித்திரை மாசத் துவக்கத்திலே – கண்ணே நீசீர் வரிசை வாங்கையிலே,வைகாசி மாசத்திலே – கண்ணே நீவயலைச் சுற்றிப் பார்க்கையிலேஆனி மாசக் கடைசியிலே – கண்ணே நீஅடியெடுத்து வைக்கையிலேஅகஸ்மாத்தா ஆவணியில் – கண்ணே நீஅரண்மனைக்குப் போகையிலேஐப்பசி மாசமெல்லாம் கண்ணே – நீஅப்பன் வீடு

பெண்ணுக்கு அறிவுரை – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணேஅறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணேநேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2 அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணேஅக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3 கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணேகண்ணெடுத்துப் பார்க்கேதேடி ©சுண்டெலிப்பெண்ணே 4 கடைக்குப்போற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணேகையலைப் பழைக்காதடி -சுண்டெலிப்பெண்ணே 5 காவாலிப் பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணேகாலாட்டிக்கிட்டு நிற்காதடி -சுண்டெலிப்பெண்ணே 6 நெற்றியிலே பொட்டுவைச்சு -சுண்டெலிப்பெண்ணேநெருங்கிநிண்ணு பேசாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 7 புருவத்திலே மையைவச்சு -சுண்டெலிப்பெண்ணேபொய்ஒண்ணுமே சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 8 ஜோட்டிலே மாட்டல்வச்சு -சுண்டெலிப்பெண்ணேஜோக்குநடை நடக்காதேடி -சுண்டெலிப்பெண்ணே 9 வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச்-சுண்டெலிப்பெண்ணேவெறும்பயலைப்

வானம் கறுத்தால் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

வானம் கறுத்தால், மழை பெய்யும்மழை பெய்தால், மண் குளிரும்மண் குளிர்ந்தால், புல் தழைக்கும்புல் தழைத்தால், பசு மேயும்பசு மேய்ந்தால், பால் சுரக்கும்பால் சுரந்தால்,கன்று குடிக்கும்கன்று குடித்து மிஞ்சியதைகறந்து நாமும் வந்திடலாம்;காய்ச்சி நாமும் குடித்திடலாம் குழந்தை பாடல்கள் – தமிழ் DNA வானம் கறுத்தால்

ஆயர்பாடி மாளிகையில் – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020

ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோ(ஆயர்பாடி…) பின்னலிட்ட கோபியரின்கன்னத்திலே கன்னமிட்டுமன்னவன் போல்லீலை செய்தான் தாலேலோஅந்த மந்திரத்தில் அவர் உறங்கமயக்கத்திலே இவனுறங்கமண்டலமே உறங்குதம்மாஆராரோமண்டலமே உறங்குதம்மாஆராரோ(ஆயர்பாடி…) நாகப்படம் மீதில் அவன்நர்த்தனங்கள் ஆடியதில்தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்தாலேலோஅவன் மோக நிலை கூடஒரு யோக நிலை போலிருக்கும்யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோயாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ(ஆயர்பாடி…) கண்ணனவன் தூங்கிவிட்டால்காசினியே தூங்கிவிடும்அன்னையரே துயிலெழுப்ப வாரீரோஅவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்போதை முத்தம் பெறுவதற்க்கும்கன்னியரே கோபியரே வாரீரோகன்னியரே கோபியரே வாரீரோ(ஆயர்பாடி…) தாலாட்டுப் பாடல்கள் –

மழையை நம்பி ஏலேலோ – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசாமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசாமரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசாகிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசாஇலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசாபூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசாபிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசாகாயைநம்பி ஏலேலோ பழம்இருக்க ஐலசாபழத்தைநம்பி ஏலேலோ மகன்இருக்க ஐலசாமகனை நம்பி ஏலேலோ நீஇருக்க ஐலசாஉன்னைநம்பி ஏலேலோ நான்இருக்க ஐலசாஎன்னைநம்பி ஏலேலோ எமன்இருக்க ஐலசாஎமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசாகாட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA மழையை

தென்னை மரத்து – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

தென்னை மரத்து இளநீரூ -நல்லதேன்போல இனிக்கும் சுவைநீருஎன்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்ஏற்றுக் குடித்தால் நலம் தருமே! பானத்தில் இளநீர் அரியவகை -எந்தகாலமும் நமக்கு நல்ல துணைவிலையோ ஒன்றும் அதிகமில்லை -இங்குஇதுபோல் பானம் வேறு இல்லை. இயற்கை தந்தது இளநீரு -நல்லஇன்சுவை தந்திடும் இளநீருஉடலின் வெப்பம் தணித்திடுமே -நம்உள்ளம் தனிலே நிறைந்திடுமே! கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே -நம்அனைவரின் தாகம் தீர்த்திடுமே!அனைவரும் நாளும் குடித்திடலாம் -வரும்ஆனந்தம் தனிலே திளைத்திடலாம்! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA தென்னை மரத்து

பச்சை இலுப்பை – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020

பச்சை இலுப்பை வெட்டிபவளக்கால் தொட்டிலிட்டுபவளக்கால் தொட்டிலிலேபாலகனே நீயுறங்குகட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீசித்திரப் பூந்தொட்டிலிலேசிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீசித்திரப் பூந் தொட்டிலிலே. தாலாட்டுப் பாடல்கள் – தமிழ் DNA பச்சை இலுப்பை

விறகொடிக்கும் பெண் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோவிறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1 காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோகற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2 காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோகற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3 காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோகஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4 கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோகாட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5 கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோகல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6 கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோகல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ