மயிலே மயிலே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்! பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி நடந்துவாசட்டை போட்டு விடுகிறேன்! ஓடைக் கொக்கு இங்கே வாஓடிப் பிடித்து ஆடலாம்!மாடப் புறாவே இறங்கிவாமடியில் குந்திப் பேசலாம்! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA மயிலே மயிலே

உசந்த தலைப்பாவோ – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020

உசந்த தலைப்பாவோ‘உல்லாச வல்லவாட்டு’நிறைந்த தலை வாசலிலேவந்து நிற்பான் உன் மாமன்தொட்டிலிட்ட நல்லம்மாள்பட்டினியாப் போராண்டாபட்டினியாய் போற மாமன்-உனக்குபரியம் கொண்டு வருவானோ? தாலாட்டுப் பாடல்கள் – தமிழ் DNA உசந்த தலைப்பாவோ

சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1 சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோசரியான பருத்திக்காடு – ஏலங்கிடி லேலோ 2 எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற குச்சுவீடு – ஏலங்கிடி லேலோ 3 சந்தனம் வீடுதானும் – ஏலங்கிடி லேலோசரியான மச்சுவீடு – ஏலங்கிடி லேலோ 4 எல்லாரும் கட்டும்வேட்டி-ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற மல்லுவேட்டி – ஏலங்கிடி லேலோ 5 சந்தனம் கட்டும்வேட்டி – ஏலங்கிடி லேலோசரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6 எல்லாரும் போடும்சட்டை-ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை

பள்ளிக் கூடம் போகலாமே – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

பள்ளிக் கூடம் போகலாமேசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாமேசின்ன பாப்பா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்சின்ன பாப்பா -கல்வித்தோட்டம் அந்த பள்ளிக் கூடம்சின்ன பாப்பா! பள்ளிக் கூடம் திறந்தாச்சிசின்ன பாப்பா -உனக்குநல்ல நேரம் பிறந்தாச்சிசின்ன பாப்பா! வீட்டுச் செய்தி கதைகள் பேசிபொழுது போக்கலாம் -அடஏட்டுக் கல்வி பாடம் கூடஎழுதிப் பார்க்கலாம்! உடலும் மனமும் வளர்வதற்குசின்ன பாப்பா -ஏற்இடமே இந்தப் பள்ளிக் கூடம்சின்ன பாப்பா! பள்ளிக் கூடம் போகலாம் வாசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாம் வாசின்ன பாப்பா! குழந்தை

பால் குடிக்கக் கிண்ணி – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020

பால் குடிக்கக் கிண்ணி,பழந்திங்கச் சேணாடுநெய் குடிக்கக் கிண்ணி,முகம் பார்க்கக் கண்ணாடிகொண்டைக்குக் குப்பிகொண்டு வந்தான் தாய்மாமன். தாலாட்டுப் பாடல்கள் – தமிழ் DNA பால் குடிக்கக் கிண்ணி

ஆள் தேடுதல் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020

தெருத்தெருவாய் தேடி வாறான் – ஏலங்கிடி லேலோதிண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1 சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து – ஏலங்கிடி லேலோசயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ 2 முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்துப் பார்த்து -ஏலங்கிடி லேலோமுணுமுணுன்னு பேசிவாறான் -ஏலங்கிடி லேலோ 3 ஆளுப் பிடிக்க ஏழுமணிக்கு -ஏலங்கிடி லேலோஆலாப் பறந்து வாறான் -ஏலங்கிடி லேலோ 4 அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -ஏலங்கிடி லேலோஅட்டுவான்சும் கொடுத்துவாறான் -ஏலங்கிடி லேலோ 5 ஆளுக்கொரு அரிவாள்தானும் -ஏலங்கிடி லேலோஆறுமுகக் கயிறுரெண்டும் -ஏலங்கிடி

ஆனை ஆனை அழகர் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

ஆனை ஆனைஅழகர் ஆனை அழகரும் சொக்கரும்ஏறும் ஆனை கட்டிக்கரும்பைமுறிக்கும் ஆனை காவேரி தண்ணீரைகலக்கும் ஆனை குட்டி ஆனைக்குக்கொம்பு முளைச்சுதாம் பட்டணமெல்லாம்பறந்தோடிப் போச்சுதாம்! குழந்தை பாடல்கள் – தமிழ் DNA ஆனை ஆனை அழகர்

கூடி வாழ்வோம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சு பசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..! எங்கிருக்கும் பறவையும்எகிறிப் பறந்து வந்துச்சு இனத்தின் குரலைக் கேட்டுச்சுஇறங்கி வந்து பார்த்துச்சு..! கோமாதா நமக்கு எல்லாம்குடிக்க பாலும் தந்துச்சு கூடி நாமும் கூட்டம் போட்டு`அன்னை’ யென்று சொல்லுச்சு..! பாதுகாக்கும் தாயாகபட்டி தொட்டி சொல்லுது சாதுவாக இருந்த அதுவும்சினந்து காடு வெல்லுது..! பறவைக் கூட்டம் நாமெல்லாம்போற்றி அதை வணங்குவோம் சிறகாய்

எங்கும் நெல் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோகிழட்டுமாடும் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 1 கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோகீழேபார்த்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 2 மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோமேலேபார்த்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 3 வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோவாரிவாரி மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 4 தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோதிரட்டித் திரட்டி மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 5 நாட்டியக் குதிரைபோல – ஏலங்கிடி லேலோநாலுகாதில் ம’த’க்குதையா – ஏலங்கிடி லேலோ 6

ஆனை விற்கும் வர்த்தகராம் – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 16, 2020

ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்சேனைக் கெல்லாம் அதிகாரியாம்சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்குசின்னச் சட்டை கொடுத்தானோ உனக்குபட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்பல வர்ணச் சட்டைகளும்பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்குகட்டிக் கிடக் கொடுத்தானோ!பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்குமின்னோலைப் புஸ்தகமும்கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணேகவிகளையும் கொடுத்தானோ ! தாலாட்டுப் பாடல்கள் – தமிழ் DNA ஆனை விற்கும் வர்த்தகராம்

முளைப்பாரிப் பாடல் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

தானானை தானானை தானானை தானானை வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சுவட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறுஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்துமாட்டாந்தொழு தெறந்து மாட்டெருவு அள்ளிவந்து கடுகுலயுஞ் சிறுபயறு காராமணிப் பயறுமிளகுளயுஞ் சிறுபயறு முத்தான மணிப்பயறுமொளபோட்ட ஒண்ணா நாளு ஓரெலையாம் முளைப்பாரிஓரெலைக்குங் காப்புக் கட்டி ஒருபானை பொங்கலிட்டுமுளைப்பாரி போடுங்கம்மா முத்தாலம்மனைப் பாடுங்கம்மாதானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA முளைப்பாரிப் பாடல்

நிற்கட்டுமா போகட்டுமா – நாட்டுப்புற பாடல்கள்

Posted by - ஏப்ரல் 16, 2020

செக்கச் சிவந்திருப்பாள் செக்கச் சிவந்திருப்பாள் – குட்டி ..செட்டிமகள் போலிருப்பாள் வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி …வந்திருப்பாள் சந்தைக்கடை சந்தையிலே மருக்கொழுந்து – குட்டி … சரசமாத்தான் விற்குதடி! கையிலொரு காசுமில்லை-குட்டி … கடன்கொடுப்பார் யாருமில்லை! வட்டவட்டப் பாறையிலே- குட்டி … வரகரிசி தீட்டையிலே ஆர்கொடுத்த சாயச்சீலை – குட்டி … ஆலவட்டம் போடுதடி! மஞ்சள் புடவைக்காரி- குட்டி … மாதுளம்பூக் கூடைக்காரி! மஞ்சள் புடவையிலே-குட்டி … மருக்கொழுந்து வீசுதடி! கானக் கரிசலிலே … களையெடுக்கும் பெண்மயிலே! நீலக்

தொடர் வண்டி – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட தூரம் போகும் வண்டி தண்டவாளத்தில் அது போகும் தட தட வென்று விரைந்தோடும் ‘கூ’…. என ஒலிப்பது புகை வண்டி ‘பாம்’…. என ஒலிப்பது மின் வண்டி பச்சை, சிவப்பு கொடி இரண்டை நிலையத் தலைவர் காட்டிடுவார் சிவப்பைக் காட்டினால் நின்றுவிடும் பச்சையைக் காட்டினால் பாய்ந்தோடும்     நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA தொடர் வண்டி

ஐரை மீனும் – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020

ஐரை மீனும் ஆரமீனும்-கண்ணே ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ஆயிரமாம் ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி அப்பன் விற்று வீடுவர அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி ஆச்சரியப் பட்டார்களாம், பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான் பிரியமாக ஆறெடுத்தேன் அயலூரு சந்தையிலே-கண்ணே நான் ஆறு மீனை விற்றுப் போட்டேன். அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன். அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான் அழகு

ஆராரோ ஆரிரரோ-2

Posted by - ஏப்ரல் 16, 2020

ஆராரோ ஆரிரரோஆறு ரண்டும் காவேரி,காவேரி கரையிலயும்காசி பதம் பெற்றவனே!கண்ணே நீ கண்ணுறங்கு!கண்மணியே நீ உறங்கு!பச்சை இலுப்பை வெட்டி,பவளக்கால் தொட்டிலிட்டு,பவளக்கால் தொட்டிலிலேபாலகனே நீ உறங்கு!நானாட்ட நீ தூங்கு!நாகமரம் தேரோட!தேரு திரும்பி வர!தேவ ரெல்லாம் கை யெடுக்க!வண்டி திரும்பி வர!வந்த பொண்கள் பந்தாட!வாழப் பழ மேனி!வைகாசி மாங்கனியே!கொய்யாப் பழ மேனி! – நான் பெத்தகொஞ்சி வரும் ரஞ்சிதமே!வாசலிலே வன்னிமரம்!வம்மிசமாம் செட்டி கொலம்!செட்டி கொலம் பெத்தெடுத்த!சீராளா நீ தூங்கு!சித்திரப் பூ தொட்டிலிலே!சீராளா நீ தூங்கு!கொறத்தி கொறமாட!கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!வேதஞ் சொல்லி

ஆராரோ அரிரரோ-1

Posted by - ஏப்ரல் 16, 2020

ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் செய்து வைப்போம் மாமன் அடித்தானோ மல்லி பூ சென்டாலே அண்ணன் அடித்தானோ ஆவாரங் கொம்பாலே பாட்டி அடித்தாளோ பால் வடியும் கம்பாலே ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு   தாலாட்டுப் பாடல்கள் – தமிழ் DNA ஆராரோ அரிரரோ-1