திருவாசகம் – கண்டபத்து – நிருத்த தரிசனம்
கண்டபத்து – நிருத்த தரிசனம் திருவாசகம்/கண்ட பத்து இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 475 வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 476 உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன்