இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம் தொடர்ச்சி
இலெமூரியா தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்-தொடர்ச்சி கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த தமிழருடைய ஒரு கனத்த தொன்னிலைசார் நாகரிகத்தின் மீதிமிச்சங்களை தன் ஆழத்தே மறைத்துக் கொண்டு உள்ளது. இந்தியாவின் இடக்கிடப்பியல் (topography) பண்டை நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவால் இந்நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவில் இருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் நாடு நாவலந்தீவு என அறியப்பட்ட ஒரு பெருந் தீவின்