விடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசாஅருமைமேகம் நமதுகுடை – ஐலசாபாயும் புயல் நம்ஊஞ்சல் – ஐலசாபனிமூட்டம் உடல்போர்வை – ஐலசாகாயும் ரவிச்சுடர்கூரை – ஐலசாகட்டுமரம் வாழும் வீடு – ஐலசாமின்னல்வலை அரிச்சுவடி – ஐலசாபிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள் – ஐலசாமின்னல் இடிகாணும் கூத்து – ஐலசாவெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசாமுழுநிலாதான் கண்ணாடி – ஐலசாமூச்சடக்கி நீந்தல் யோகம் – ஐலசாதொழும் தலைவன் பெருவானம் – ஐலசாதொண்டு தொழிலாளர் நாங்கள்