சேர்வராயன் மலை

தமிழக மலைகள் ஒரு பார்வை

3001 0

தமிழக மலைகள்

Tamil Nadu Mountains

உலகின் 24% நிலப்பகுதி மலைகளாக உள்ளது, 10% மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இப்பூமியில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன, மேலும் உலக மக்கள்தொகையில் பாதி பகுதியினர் நீருக்காக மலைகளை மட்டுமே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

தமிழர் நிலத்திணைகள்

நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சங்ககால தமிழகத்தில் நிலத்தை 5 ஆக பர்த்தனர். அவை,

 • குறிஞ்சி
 • முல்லை
 • மருதம்
 • நெய்தல்

என்னும் 4 வகை நிலத் திணிவுகளும்,

குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது 5 வது நிலமாக( பாலை) எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.

இதில் குறிஞ்சி நிலம் என்பது, மலையும் மலை சார்ந்த இடங்களும் ஆகும். இதன் தெய்வம் : சேயோன் ( சிவன், முருகன் )
ஊர் பெயர்கள் : சிறுகுடி, பாக்கம் என அழைக்கப்பட்டது.

“சேயோன் மேய மைவரை உலகமும்” எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.

உலக அளவில் மலைகள்

ஆசியாவில் 64%
ஐரோப்பாவில் 25%
தென்னமெரிக்காவில் 22%
ஆசுத்திரேலியாவில் 17%
ஆப்பிரிக்காவில் 3%
ஆகிய பகுதிகள் மலைகளினால் மூடப்பட்டுள்ளன.

List of highest mountains on Earth

தமிழக புவியியல்

தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு
தமிழக இயற்கை அமைப்பு

தமிழகத்தின் நிலப்பரப்பு சுமார் 130,058 ச.கி.மீ. இது இந்திய மாநிலங்களுள் பரப்பளவில்  11-ஆம் இடத்தில் உள்ளது. தமிழகம் மேற்கே கேரளம், வடமேற்கில் கர்நாடகம், வடக்கே ஆந்திரப்பிரதேசம் என தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

இதன் கிழக்கு எல்லையாக வங்க கடலும், தெற்கே இந்துமா கடலும் எல்லையாக உள்ளது. வங்க கடலும், அரபிக்கடலும் இந்துமா கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழகதில் உள்ளது ஒரு சிறப்பாகும்.

தமிழக இயற்கை அமைப்பு

தமிழ்நாட்டின் இயற்கையமைப்பு தோராயமாக முக்கோண வடிவில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை பொதுவாக 4 வகையாகப் பிரிக்கலாம்.

 1. மலைகள்
 2. பீடபூமிப்பகுதி (மேட்டுநிலம்)
 3. சமவெளிப்பகுதிகள்
 4. கடலோரப்பகுதிகள்

தமிழக மலைகள் (Tamil Nadu Mountains)

இங்கே தமிழக மலைகள் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். தமிழக மலைகலை 2 வகையாக பிரிக்கலாம்.

 1. மேற்குத் தொடர்ச்சி மலைகள்
 2. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்.

தமிழக மலைகள்

மேற்குத் தொடர்ச்சி  மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய 2 மலைகளும் அமையப் பெற்ற ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

மேற்குத்தொடர்ச்சி மலை

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது. மேற்குக் கடற்கரைக்கு (அரபிகடலுக்கு) இணையாகச் செல்லும் இதன் சராசரி உயரம் 1800 மீட்டர் முதல் 2400 மீட்டர் ஆகும்.

கிழக்குத் தொடர்ச்சி மலை

இந்த மலைகள் சற்று மாறுபட்ட அமைப்புடன் அதாவது தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகிறது. இதன் உயரம் சராசரியாக 1000 மீ முதல் 1500 மீ வரை உள்ளன.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும், நீலகிரியின் தொட்டபெட்டா என்ற இடத்தில் ஒன்றாக இணைகின்றது.

தமிழ்நாட்டின் உயரமான சிகரங்கள்

doddapetta-peak
தொட்டபெட்டா சிகரம்
 1. தொட்டபெட்டா (2620 மீ.), மேற்கு தொடர்ச்சி மலைகள்
 2. முக்கூர்த்தி( 2540 மீ), மேற்கு தொடர்ச்சி மலைகள்

தமிழகத்தின் உயர்ந்த மலைகள்

 • கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை

சேர்வராயன் மலை(1500-1600 மீட்டர்கள்)

 • மேற்கு தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை

ஆனைமலை (2700 மீட்டர்கள்)

மேற்குத் தொடர்ச்சி மலை

(Western Ghats)

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய நாட்டின் மேற்கு புறத்தில் அரபியன் கடலுக்கு இணையாகவும் அமைந்துள்ள ஒரு அழகிய மலைத்தொடராகும். இது மராட்டியம் மற்றும் குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே ஆரம்பிக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலை
கோபிச்செட்டிபாளையம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை

பின்பு  மராட்டிய, கோவா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்லும் இந்த மலைத்தொடர்  கன்னியாகுமரியில் தனது பயனத்தை முடிகின்றது. இதன் நீளம் சுமார் 1600 கி.மீ. இதன் சராசரி உயரம் 900 மீ. இந்த மொத்த மலைத்தொடர்களின்  பரப்பளவு சுமார் 1,60,000 சதுர கி.மீ. ஆகும்.

இதன் மிக  உயரமான சிகரம் ஆனைமுடி (2,695 மீ) இது கேரளாவில் அமைந்துள்ளது. இதுவே தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆகும்.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்று. இங்கு சுமார், 139 வகை பாலூட்டிகளும், 5000 வகை பூக்கும் தாவரங்களும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலை
புனே அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலையானது அரபி கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து, பிறகு இதன் மேற்கு திசையில் உள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரை பகுதியில் நல்ல மழையைத் கொடுக்கின்றது. இதன் காரணமக இம்மலைத்தொடரின் கிழக்கு பகுதியில் உள்ள தக்காணப் பீடபூமி  மிக குறைந்தளவு மழையை பெறுகிறது.

தமிழகத்தின் “மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில்” உள்ள மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலை தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது.

 • நீலகிரி மலை | நீலகிரி மாவட்டம்
 • ஆனை மலை | கேரளா மற்றூம் கோவை
 • பழனி மலை | திண்டுக்கல், தேனி மாவட்டம்
 • கொடைக்கானல் மலை |திண்டுக்கல் மாவட்டம்
 • குற்றால மலை | திருநெல்வேலி மாவட்டம்
 • மகேந்திரகிரி மலை | திருநெல்வேலி மாவட்டம்
 • அகத்தியர் மலை ( அ ) பொதியை மலை | சில பகுதிகள் திருநெல்வேலி
 • ஏலக்காய் மலை | சில பகுதிகள் தேனி மாவட்டத்தில்
 • மகேந்திர கிரி மலை | திருநெல்வேலி மாவட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள மலைகள் பற்றி விரிவாக பார்க்க  >>>

கணவாய்கள்

கணவாய் (Mountain pass) என்பது மலைத்தொடர்களின் இடையே அல்லது மலை முகடுகளின் மேலாகவோ செல்லும் பாதை ஆகும்.

கைபர் கணவாய் மற்றும் போலான் கணவாய்களுக்கு இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு உண்டு. இந்த 2 கண்வாய்களும் ஆப்கானித்தானையும் பாகிஸ்தானையும் இணைக்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்

பீடபூமிகளையும் சமவெளிகளையும், பிரிக்கும் தமிழக மலைகளுக்கு இடையே 2 குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன. அவை,

 • தெற்கில் ஆத்துர் கணவாய் மற்றும்
 • வடக்கில் செங்கம் கணவாய் எனப்படுகின்றது.

இந்த கணவாய்கள் கடலூர் மாவட்டத்தை சமவெளிப் பகுதியோடும், சேலம் மாவட்டத்தை பீடபூமி பகுதியோடும் இணைக்கிறது.

பாலக்காட்டு கணவாய்
பாலக்காட்டு கணவாய்

மேலும்,

 • தால்காட் கணவாய்
 • போர்காட் கணவாய்
 • பாலக்காட்டுக் கணவாய்
 • ஆரல்வாய்க் கணவாய்
 • செங்கோட்டை கணவாய்

வருசநாடு மலைக்கும் அகத்தியமலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி, செங்கோட்டை கணவாய் என்று அழைக்கப்படுகிறது.  இவைகள் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சில கணவாய்கள் ஆகும்.

பழனிக்குன்றுகள்

தமிழகத்தின் நீலகிரியிலிருந்தும் கேரளத்தின் ஆனைமுடியிலிருந்தும் ஓர் கிளைத்தொடர் குன்று சுமார் 1500 மீட்டர்கள் முதல் 2000 மீட்டர்கள் வரை உயரத்தில் கிழக்கு நோக்கிச் செல்கிறது. இந்த குன்றுகளுக்கு பழனிக்குன்றுகள் என்று பெயர்.

பழனிக்குன்றுகளுக்கு தெற்கே வருசநாடு மலைத் தொடர்கள் மற்றும், ஆண்டிப்பட்டி என்ற 2 மலைத் தொடர்கள் காணப்படுகின்றன.

கம்பம் பள்ளத்தாக்கு

கம்பம் பள்ளத்தாக்கு
கம்பம் பள்ளத்தாக்கு

பாலக்காடு கணவாய்க்குத் தெற்கே, ஏலமலை, ஆண்டிப்பட்டி மலை அகத்தியமலை ஆகியவை உள்ளது. இந்த ஏலமலைத் தொகுப்பில் செழிப்புமிக்க கம்பம் பள்ளத்தாக்கு உள்ளது.

கிழக்கு தொடர்ச்சி மலை

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats), இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி மேற்க்கு தொடர்ச்சி மலைகளை போல் தொடர்ச்சியாக இல்லாமல்,  அதாவது தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகிறது. இதன் உயரம் சராசரியாக 1000 மீ முதல் 1500 மீ வரை உள்ளன.

ஏலகிரி மலை
ஏலகிரி மலை – கிழக்கு தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக தமிழ்நாடு வரை பரவியுள்ளது. இதன் சிறுபகுதி கர்நாடக மாநிலத்திலும் உள்ளது.

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாகும். தீபகற்ப இந்தியாவின் 4 முக்கிய ஆறுகளான காவேரி, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா,  ஆகியவை இம்மலைத் தொடர்களின் இடையே பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பே ஆகும். இம் மலைத்தொடர் வங்காளவிரி குடாவிற்கு இணையாக நீண்டிருக்கிறது.

மலைவளம்

இம்மலைத்தொடர் முழுவதும்

 • பாக்சைட்
 • சுண்ணாம்புக்கல்
 • இரும்பு தாது

போன்ற கனிமங்களும், மேலும் சார்னோகைட் பாறைகள், கருங்கல் பாறைகள், உருமாறிய தகட்டுப்பாறையான கோண்டாலைட் மற்றும் படிகப்பாறைகள் ஆகியவையும் கலந்துள்ளது.

கொல்லி மலை
கொல்லி மலை – கிழக்கு தொடர்ச்சி மலை

தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்

(List of Mountains in Tamil Nadu)

 • சவ்வாது மலைதிருவண்ணாமலை மாவட்டம்)
 • கல்வராயன் மலை (விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை )
 • சேர்வராயன் மலை (சேலம்)
 • பச்சை மலைதிருச்சி, பெரம்பலூர்,சேலம் )
 • கொல்லி மலை ( நாமக்கல்மாவட்டம் )
 • ஏலகிரி மலை ( வேலூர் மாவட்டம் )
 • சமணர் மலை ( மதுரை )
 • பர்வத மலை ( திருவண்ணாமலை மாவட்டம்)
 • சித்தேரி ( தர்மபுரி மாவட்டம்)

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள மலைகள் பற்றி விரிவாக பார்க்க  >>>

[content-egg module=Amazon template=list]

தமிழக மலைகள்

(Tamil Nadu Mountains in Tamil)

மேற்கு தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

Related Post

Doddabetta

தொட்டபெட்டா மலை | சுற்றுலாத் தலம்

Posted by - டிசம்பர் 18, 2017 4
தொட்டபெட்டா தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர்......நாளொன்றுக்கு சுமார்…
ஊட்டி சுற்றுலா பயணம்

அழகிய 20 ஊட்டியின் சுற்றுலா இடங்கள்

Posted by - செப்டம்பர் 2, 2018 0
ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் தென் இந்தியர்களுக்கு ஒரு வரம் | ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர்கள், ஊட்டிக்கு 'மலைப்பிரதேசங்களின் ராணி' என பெயர்...
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

Posted by - செப்டம்பர் 12, 2018 0
மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக…
மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்

Posted by - செப்டம்பர் 11, 2018 0
மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 படுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு சுமார், 139…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன