தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

பெரியார் பொன்மொழிகள் – அரசியல் & சீர்திருத்தம்

822 0

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

பெரியாரின் பொன்மொழிகள் அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். இவர் பல துறைகள் தலைப்புகள் பற்றி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடபடுபவை பெண் விடுதலை, சுயமரியாதை, சமூக சமநிலை, சாதி ஒழிப்பு போன்றவை.

இந்த பதிவில் பெரியாரின் சமூகம் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பான சில பொன்மொழிகளை பார்ப்போம்.

 

சீர்திருத்தம்

நமது மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் செத்துப்போனவர்களிடமே யொழியே, இருப்பவர்களிடம் இல்லை..

 

[wpsm_testimonial]

ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடைமை பேசுவது – அரிச்சுவடி படிக்காமல் பி.ஏ., வகுப்பைப்பற்றி பேசுவதாகும்..

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட முறைகளைக் கையாண்டு, சமூகப் பேதங்களைப் போக்க, ஜாதியை ஒழிப்பதற்குச் சரியான வழி வகை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம்.

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை..

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக புத்தியும் வேண்டும்..

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்..

[/wpsm_testimonial]

பெரியார் பொன்மொழிகள்

[wpsm_testimonial]

சிலர் திராவிடன் என்பது வடமொழி என்பார்கள். அதைப்பற்றிய கவலையோ ஆராய்ச்சியோ தேவையில்லை. ‘காபி’ என்பது ஆங்கிலச் சொல் என்று எவனாவது ‘காபி’ குடிக்காமல் இருக்கிறானா?

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

இந்து மதப் பண்டிகைகள், திராவிடர்களை இழிவுபடுத்தி என்றென்றும் அடிமைப்படுத்தவே ஏற்பட்டவை..

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும், அதற்கான அறிவும் பெறுவதே சுயராஜ்யமாகும்..

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

பொதுவுடைமை என்பது சமபங்கு, பொது உரிமை என்பது சம அனுபவம் ஆகும்.

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

பொதுத் தொண்டு செய்பவனுக்கு நேரம், காலம் கிடையாது.

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

ஜோதிடம் என்பது சோம்பேறிகளின் மூலதனம்; பொய் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பதற்கான தொழில்முறை..

[/wpsm_testimonial]

பெரியார் பொன்மொழிகள்

[wpsm_testimonial]

மக்கள் அறிவையும், ஆற்றலையும், முடக்கி, முன்னேற விடாமல் தடுக்கச் சுயநலமிகள் கையாளும் சொல்லே தலைவிதி..

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

ஒரு மொழியோ, வடிவமோ எவ்வளவு தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டியது அவசியம்..

[/wpsm_testimonial]

 • ஆத்மா, மோட்சம், நரகம், மறுப்பிறப்பு, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன்..
 • ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தும் பிறருக்கும் உண்டாகச் செய்வதுதான் நாகரீகம்..
 • ஒழுக்கமாய், நாணயமாய் சுயநலமில்லாமல் உழைப்பதன் மூலம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது வெற்றிக்கு வழியே ஆகும்..

எவன் ஒருவன் மக்களை வஞ்சிக்கிறானோ, தனது தேவைக்கு மீறிய சொத்து சேர்க்கிறானோ அவன்தான் திருடன்..

[wpsm_testimonial]

இந்தக் காலத்தில் பிறரை ஏமாற்றாமல், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் இருப்பதே அறமாகும்..

[/wpsm_testimonial]

 • எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக் குறைவுக்கும், மூடநம்பிக்கைக்கும் பயன்படக் கூடாததாய் இருக்க வேண்டும்..
 • மோட்சம் என்பது அர்த்தமில்லாத சொல்..
 • போர் முனைக்குச் செல்லும் வீரர்போல் புரட்சிக்குத் தயாராக இருங்கள்..

வாயில், நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத்தின்னது. இது போன்றதே பார்ப்பனர் தன்மை.

பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் மனித சமூகத்துக்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும்..

[wpsm_testimonial]

நாம் மானமுள்ள சமுதாயம் என்று சொல்லிக் கொள்ளும் நிலை ஏற்பட வேண்டுமானால், நம் எண்ணிக்கைக்கு உண்டான விதிப்படி கல்வி, உத்தியோகம், பதவி ஆதிக்கம் ஏற்பட்டுத் தீர வேண்டும்..

[/wpsm_testimonial]

 • மனத்துள்ளே குற்றம் குறை இருந்தால் வெளியில் செய்யும் செயலும் குறையுடையதாகவே இருக்கும்..

பெரியார் பொன்மொழிகள்

[wpsm_testimonial]

சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை-மேல்பூச்சு வேலை செய்வதோ பயன்தராது. இன்றையச் சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்து விட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை சாதியற்ற உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்கவேண்டும்.

[/wpsm_testimonial]

நம்முடைய சமுதாயம் குரங்குப்பிடிச் சமுதாயம்; உலகம் முக்காலே அரைக்கால்வாசி முன்னேற்றம் அடைந்த பிறகும், இது முன்னோர் சொன்னபடி நீண்ட நாளாக நடந்து வந்த பழக்கம் என்றுகூறி, முதுகுப் பக்கம் பார்த்துக்கொண்டு பிடிவாதமாக நடந்து, இன்னும் காட்டுமிரண்டித் தன்மையிலேயே இருக்கிறது.

நீ ஒரு ஊரிலே இருக்கிறாய். அந்த ஊரிலே 100 பேருக்கு நரம்புச் சிலந்தி வந்திருக்கிறது. அது எதனால் வந்தது என்று பார்க்கிறாய். அந்த ஊரில் உள்ள கேணியில் நரம்புச் சிலந்தி பூச்சி இருக்கிறது. அந்த தண்ணீரைக் குடிப்பதால்தான் அவர்களுக்கு நரம்புச் சிலந்தி வந்திருக்கிறதென்றால் அந்தக் கேணியிலிருக்கிற நீரையெல்லாம் இறைத்து விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும்.

ஊற்றே நரம்புச் சிலந்தியை உண்டாக்கக் கூடியதாக இருந்தால், அந்த ஊற்றையே அடைத்துவிட்டு, வேறு புதுக்கேணி வெட்ட வேண்டும். இல்லை, நான் அந்த தண்ணீரைத்தான் குடிப்பேன் என்றால் அந்த நோய்க்கு ஆட்பட்டாக வேண்டுமே தவிர, அதிலிருந்து தப்ப வழியில்லை.

நான் அந்த ஊற்றை அழிக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருக்கின்றேன். சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், சாதி, பழக்க வழக்கம், சாத்திரங்கள், கடவுள், கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல் – எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்த மேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவுப் பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது.

[wpsm_testimonial]

சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும், பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்கு கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால், அக்கடவுளைப் பஞ்சமனும், சூத்திரனும் தொழலாமா?

[/wpsm_testimonial]

 • நம் நாட்டில் புதிதாக ஒருவரைச் சந்தித்தால் அவர் உத்தியோகம் பற்றிக் கேட்போம். ரசியாவிலோ, ‘சமுதாய சேவை என்ன’ என்றுதான் கேட்பார்கள்.
 • ஒவ்வொரு மனிதனும், சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்.
 • எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்..
 • பொதுவுடைமை என்று கூறுவதன் தத்துவமே மனிதன் கவலையற்று வாழ வேண்டும் என்பதுதான்; சொந்தவுடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வேயாகும்..

மனிதன் மற்ற மிருகங்களைப் போல் அல்லாமல், மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான். சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும். மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும்.

Periyar ponmoligal

மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீர வேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும். அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும்? பிறப்பதும், சாவதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும்.

மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும். சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும்.

வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக்கூடாது. மக்களுக்காகவும், தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும்.

ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத்தொண்டு என்று வந்து விட்டால் அவை இரண்டையும் பார்க்கக் கூடாது.

ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ, வலி இருந்தாலும் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவது போல், உலகில் வேறு எந்த தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும், குறை பாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும் படியும் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.

 • பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை.
 • சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான்.
 • எதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும், ஏச்சு வந்தாலும், எவ்வித இழப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசிவரை கொள்கையை நழுவவிடாது காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும்.

உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக்கொண்டு தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள்.

[wpsm_testimonial]

எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக, நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

[/wpsm_testimonial]

Periyar Ponmozhigal

 

பெரியாரின் பொன்மொழிகள் – அரசியல்

தேர்தலுக்கு நிற்பவன் எவனாக இருந்தாலும் அவன் அயோக்கியனே!..

[wpsm_testimonial]

இராவணனது அரசு முறை மிகுதியும் நாகரிகம் உடையதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு அவனது மந்திராலோசனை சபையும் அங்கு நடந்ததாகச் சொல்லும் வாதப் பிரதிவாதங்களுமே சான்றாகும்..

[/wpsm_testimonial]

எத்தனை ஆண்டுகாலம் ஆண்டோம் என்பதில் பெருமையில்லை என்னென்ன காரியங்கள் செய்தோம் என்பதில்தான் பெருமை..

ஓர் இணைச் செருப்பு 14 வருட காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு – மனிதனே அல்லாமல் ஓர் இழிவான மிருகம் ஆட்சி செய்தால்கூட அது அதிகமான அவமானம் என்றோ, குறை என்றோ நான் சொல்ல வரவில்லை ஆனால், மனிதனானாலும், மிருகமனாலும் எந்தக் கொள்கையோடு, எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது, அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை.

 • அடிக்கடி கட்சி மாறிக்கொண்டும், மந்திரி சபைகளைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தும், அராசகம் விளைவித்துவரும் நிலையில், இந்த நாடு சுதந்திரத்துக்கோ, சனநாயகத்துக்கோ அருகதையுள்ள நாடாகுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

[wpsm_testimonial]

ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவது தானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல!

[/wpsm_testimonial]

[wpsm_testimonial]

சூழ்ச்சியில் அடைந்த வெற்றி மனிதனை, சதா சூழ்ச்சியிலேயே இருக்கச் சொல்லுமே ஒழிய, வெற்றியை அனுபவிக்கக் கூட நேரமளிக்காது.

[/wpsm_testimonial]

 • எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகிறோதோ அங்குதான் புரட்சி மலர்கள் வீறுகொண்டு பூக்கும்..
 • மக்களாட்சிக்கு மக்கள் அறிவாளிகளாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்..

பெரியாரின் பொன்மொழிகள்

[wpsm_testimonial]

முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்.

[/wpsm_testimonial]

பெரியார் பற்றிய புத்தகங்கள்

 

பெரியாரின் பொன்மொழிகள் – பிற தலைப்புகளில்

பெண் விடுதலை , சாதி, சுயமரியாதை, கல்வி பற்றிய பெரியாரின் பொன்மொழிகள் பார்க்க இங்கு சொடுக்கவும்

Related Post

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

கௌதம புத்தர் – பொன்மொழிகள்

Posted by - ஜூலை 5, 2020 0
கௌதம புத்தர் – பொன்மொழிகள் கௌதம புத்தர்  பொன்மொழிகள்: ஆசையே துன்பத்தின் அடிப்படை. கௌதம புத்தர் கௌதம புத்தர் – ஐ (Gautama Buddha) அடிப்படையாகக் கொண்டு…
அண்ணாதுரை பொன்மொழிகள்

அண்ணாதுரை பொன்மொழிகள்

Posted by - ஜூலை 5, 2020 0
அண்ணாதுரை பொன்மொழிகள் அண்ணாதுரை பொன்மொழிகள்: ஒன்றே குலம், ஒருவனே தேவன். அறிஞர் அண்ணாதுரை அறிஞர் அண்ணா என அறியப்படும் சி. என். அண்ணாத்துரை தமிழக அரசியல்வாதியும் அறிஞரும்…
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

Posted by - ஜூலை 4, 2020 0
நெல்சன் மண்டேலா – பொன்மொழிகள் கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம் நெல்சன் மண்டேலா   நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை…
பாரதிதாசன் பொன்மொழிகள்

பாரதிதாசன் பொன்மொழிகள்

Posted by - ஜூலை 5, 2020 0
பாரதிதாசன் பொன்மொழிகள் தமிழுக்கும் அமுதென்று பேர்!- அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! பாரதிதாசன் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964)…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன