தந்தை பெரியார் பொன்மொழிகள்
தந்தை பெரியார் பொன்மொழிகள் (Thanthai Periyar Ponmozhigal) அனைத்தும் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமானவை குறிப்பாக தமிழத்தில். இவர் பல துறைகள் தலைப்புகள் பற்றி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடபடுபவை பெண் விடுதலை, பெண் கல்வி, சுயமரியாதை, சமூக முன்னேற்றம், சாதி ஒழிப்பு போன்றவை.
இந்த பதிவில் சாதி, மதம், கடவுள் பற்றிய தந்தை பெரியார் பொன்மொழிகள் பார்ப்போம்.
- பெரியாரின் பிற பொன்மொழிகளுக்கு இங்கு சொடுக்கவும்.
- பெரியாரை பற்றிய மேலும் படிக்க இங்கு சொடுக்கவும்.
- பிற தலைவர்களின் பொன்மொழிகள் பார்க்க
கடவுள் , மாதம் பற்றி தந்தை பெரியார் பொன்மொழிகள்
[wpsm_testimonial]
டாக்டர் அம்பேத்கர் ஆரம்பத்தில் இந்து மதத்தை திருத்தலாமா என்று எண்ணினார், பிறகு அதை திருத்த முடியாது ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்..
[/wpsm_testimonial]
[wpsm_testimonial]
தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்..
[/wpsm_testimonial]
பார்ப்பனர்கள் தம் உயர்விற்கும் தமிழர்களின் இழிவிற்குமே தீபாவளி போன்ற பண்டிகைகளை உண்டாக்கியுள்ளனர்..
மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி வளர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் நினைப்பு தோன்றியிருக்க வேண்டும்..
[wpsm_testimonial]
சாதி, மதங்கள் என்பவை எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவையே..
[/wpsm_testimonial]
பேராசை இல்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பிப் பின்பற்றமாட்டான்..
நம் நாடு ஏழை நாடு, கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும்?..
[wpsm_testimonial]
சாமி குழந்தைகளைக் கொடுக்கிறது என்று சொல்லுகிறார்களே, அந்தச் சாமி கஞ்சியையும் ஊற்றுமா?..
[/wpsm_testimonial]
- மனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும்..
- கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம்..
- சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும்?..
[wpsm_testimonial]
கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை..
[/wpsm_testimonial]
ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை..
பகுத்தறிவு, சுத்ந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை?..
- திருவிழா என்பது கண்ணடிக்கும் கான்பிரன்சு..
வகுப்புவாதம் கூடாது என்று கூறும் சர்க்கார் நாமம் போட்டால் இரண்டாண்டு கடுங்காவல்; பூணுல் அணிந்தால் ஜென்ம தண்டனை என்று சட்டம் செய்திருக்க வேண்டாமா?..
சாதி ஒழிப்பு பற்றி தந்தை பெரியார் பொன்மொழிகள்
ஒவ்வொரு மனிதனும், சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்கவேண்டும். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்..
மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை.
[wpsm_testimonial]
எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல, அது போலவே எவனும் எனக்கு மேலாவனும் அல்ல..
[/wpsm_testimonial]
- முதலில் மனிதன் மனிதனாக வேண்டும்; இரண்டாவது அவனுக்கு அறிவு வளர வேண்டும்..
- இந்த நாட்டை வருணாசிரம் தருமத்தின் மூலமும், மனு தருமத்தின் மூலமும் பார்ப்பனர்களே ஆண்டு வருகின்றனர்..
[wpsm_testimonial]
தனிப்பட்ட மனுஷனே, உன் பொண்டாட்டியை என்று சொன்னால் கத்தியை எடுத்துக் கொள்கிறான். இத்தனைப் பேரையும் தேவடியாள் மகன் என்கிறான் ஒரு பயலுக்கும் மானம் இல்லையே!.
[/wpsm_testimonial]
பெரியபுராணமும், ராமயணமும், பாரதமும் உள்ளவரை ஜாதிபேதமும் வருணாசிரமும் ஒழியவே ஒழியா..
- பார்ப்பனர்கள் மனிதர்களாக இருக்கட்டும்; தேவர்களாக இருக்க வேண்டாம் என்றுதான் நான் கூறுகிறேன்..
பார்ப்பானோடு போராடுகிற கடைசிப் போராட்டம் என்று கருவறை நுழைவுப் போராட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டும்..
- பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது..
[wpsm_testimonial]
கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக்கூடாது?..
[/wpsm_testimonial]
பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் முன்னுக்கு வந்தவர்களே தவிர அறிவு, திறமை, நாணயத்தால் அல்ல..
இந்த நாட்டில் பாமர மக்களுக்காகவோ ஏழை மக்களுக்காகவோ ஒருவன் வேலை செய்ய வேண்டுமானால் அவனுக்கு முதலில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சனைதான் முன் நிற்கும்..
- சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா?
சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள்.
நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால், அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா?
நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப் போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா?
அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதி நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டும்.
- மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப் படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் – நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.
தீண்டாமை
தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.
சாதி பேதம் ஒழிவதாலும், மேல் சாதி-கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப் போகுமானால், சுயராச்சியம் வருவது தடைப்பட்டு போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல்.
Periyar Ponmozhigal Images
[wpsm_minigallery ids=”14629,14634,14635,14636,14637,14648,14639,14640,14641,14642,14643,14644,14645,14646,14647,14648,14649,” title=”பெரியார் பொன்மொழிகள் படங்கள்” prettyphoto=”true”]
பெரியார் பற்றிய புத்தகங்கள்
பெரியாரின் பொன்மொழிகள் – பிற தலைப்புகளில்
பெண் விடுதலை , சாதி, சுயமரியாதை, அரசியல் பற்றிய பெரியாரின் பொன்மொழிகள் பார்க்க இங்கு சொடுக்கவும்