Thiruvalluvar Pirantha oor

திருவள்ளுவர் பிறந்த ஊர் எது ?!

14542 0

திருவள்ளுவர் பிறந்த ஊர்

திருவள்ளுவர் பிறந்த ஊர் (Thiruvalluvar Pirantha oor), வள்ளுவரின் சமயம் போன்றவை பல காலமாக ஒரு விவாதத்திற்குரிய வதமாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் அவரை தான் ஊர்க்காரர் என்றும் தான் சதி, தான் மதத்துகாரர் என்றும் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து சமயம், சாதி மற்றும் ஊர் காரர்களும் உரிமை கொண்டாடுகின்றனர். இந்த பதிவில் வள்ளுவர் பிறந்த ஊரை பற்றி பார்க்கலாம்.

about thiruvalluvar in tamil

திருவள்ளுவற்கு வழங்கும் வேறு பெயர்கள்

(Thiruvalluvar other names in Tamil)

 • தெய்வப் புலவர்
 • செந்நாப் புலவர்
 • தெய்வத் திருவள்ளுவர்
 • செந்தாப் போதார்
 • திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
 • தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
 • தேவர் திருவள்ளுவர்
 • பொய்யில் புலவர்
 • வள்ளுவ தேவன்(ர்)
 • வள்ளுவர்
 • தேவிற் சிறந்த திருவள்ளுவர்
 • நாயனார்
 • மாதாநுபங்கியார்
 • முதற் பாவலர்
 • தேவர்
 • புலவர்
 • பெருநாவலர்
 • பொய்ய மொழியார்

திருவள்ளுவர் ஆண்டு

thiruvalluvar history in tamil

திருவள்ளுவர் பிறந்த காலம் கி.மு.31 ஆம் ஆண்டு. தமிழ் மக்கள் இவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுதுகின்றோம் .

பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறையை சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் பிறந்த ஆண்டை ஆராய்ந்து கண்டறிந்தார்கள்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்ற அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவராக இருந்தார் என்ற காரணத்தினால் 1971 ல் தமிழக  அரசு அலுவலகங்களில் கிறிஸ்து பிறந்த ஆண்டுக்கு பதிலாக திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டு என ஆணையிட்டார். அது 1981ல் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சியில் தான் முதன் முதலாக அரசு அலுவலகங்களிலும் நாட்காட்டிகளிலும் செய்யலாபட்டுக்கு வந்தது. பிறகு தமிழ் பஞ்சாங்கங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு சேர்க்கப்பட்டது.

திருவள்ளுவர் பிறந்த ஊர் மதுரை !

“உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கச் சென்ப இப்பக்கம்
மாதாநுபங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற் கூடற் கச்சு”

என்று கூறும் திருவள்ளுவ மாலையிலே வரும் பாடலுக்கு உபகேசியை மணந்த கண்ணபிரான் வடமதுரைக்கு அச்சு ஆவார்.
அது போல் திருக்குறள் படைத்த மாதாநுபங்கியும் செந்நாப் போதருமாகிய திருவள்ளுவர் தென்மதுரைக்கு அச்சு ஆவர் என்று கூறி வள்ளுவர் பிறந்த இடம் மதுரை என்பர்.

கடல்கொண்ட தென்மதுரை / தென்குமரி

மேற்குறிப்பிட்ட பாடலில் முக்கியமாக கவணிக்கப்படவேண்டிய சொல் “புனற் கூடல்” என்ற சொல்லாகும்.

“புனற் கூடல்” என்பது பஃறுளியாறும் முக்கடல் நீறும் ஒன்று சேரும் இடம் என்பதனையே குறிக்கும்.

மேலும் மதுரை மாநகரை “கூடல்” என்று திருமுருகாற்றுப்படையும், “நான்மாடக் கூடல்” என கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. மதுரையையை “புனற்கூடல்” என்று இலக்கியமோ, கல்வெட்டோ அழைக்கவில்லை.
எனவே வள்ளுவர் பிறந்தது தென்மதுரையாகிய குமரிமாவட்டம் அல்லது கடல் கொண்ட தென்குமரியின் புதைந்த மாநிலமாகவும் இருக்கலாம். அல்லது இன்றைய கன்னியாகுமரியாகவும் இருப்பதற்கு வாய்புகள்அதிகம்.

உக்கிரபாண்டிய மன்னனின் சபையில் தான் திருக்குறள் அரங்கேரியதாக வாய்மொழிசெய்திகள் உண்டு. இது உண்மையாகின் அது உக்கிரபாண்டிய மன்னனின் கபடாபுரத்தையோ அல்லது தென்மதுரையையோ தான் குறிப்பிடும். தற்போதைய கூடல் மாநகராகிய மதுரையையை அல்ல என்பதை நாம் அறிதல் வேண்டும்.

திருவள்ளுவர் பிறந்த ஊர் மைலாப்பூர் !

வள்ளுவரின் கோவில் சென்னையில் உள்ள மைலாப்பூரில் இருப்பதால் அதனை அவரின் பிறப்பிடமாக ஒருசில பிரிவினர் கூறுவதும் உண்டு. ( ஆனால் மேலும் இன்றைய மைலை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த வணமாகவே இருந்துள்ளது குறிப்பிடதக்கது. )

திருவள்ளுவர் பிறந்த ஊர் நெல்லை மாவட்டம் !

நெல்லை மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள பெருங்குளத்தில் உக்கிரப்பெருவழுதியின் அவையிலே திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்று கூறுவர் உளர். டாக்டர் உ.வே சாமிநாதையர் தமது “என் சரிதம்” என்ற நூலில் தான் பெருங்குளத்திலுள்ள செங்கோல் மடத்தில் தங்கியபோது மாடாதிபதி தன்னை பெருங்குளத்து சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றதையும் “அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்து சிவபெருமானை பூசித்தமையால் அவ்வூர் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்ற திருநாமம் வழங்குகிறதென்றும், அந்தப்பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப்புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடை பெற்றது என்றும் அதற்கு அடையாளமாக சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும், உக்கிரபாண்டியர் வடிவமும் உண்டு என்றும் கூறியுள்ளார். (என் சரிதம் டாக்டர் உ.வே சாமிநாதையர் பக்கம் 932).

திருவள்ளுவர் உக்கிரபெருவழுதி காலத்தவர் என்று சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் பதிப்பித்த “திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும்” என்ற நூலின் முன்னுரையில் எஸ்.வையாபுரி பிள்ளை குறிப்பிடுகிறார். திருவழுதி வளநாட்டின் பகுதிகளே ஸ்ரீவைகுண்டமும் பெருங்குளமும் என்று ஸ்ரீவைகுண்ட கைலாசநாதர் மற்றும் கள்ளபிரான் கோவில்களில் கிடைத்த கல்வெட்டுகள் கூறுகின்றன.

திருவள்ளுவர் பிறந்த ஊர் எது ?

Thiruvalluvar Pirantha oor Ethu ?

திருவள்ளுவர் தொன்மையான தமிழ்க் குடியைச் (தாழ்த்தப்பட்ட சாதி என்று தற்போது சொல்லும்) சேர்ந்தவர் என்ற கருத்து கி.பி.1050 இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்கள் தெரிவிக்கின்றன.

திருவள்ளுவர் காலத்தில் சாதிப் பிரிவுகள் இருந்திருக்கின்றன. அதனால் சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன.

திருவள்ளுவமாலை பாடல் விளக்கம்

அதில் ஒன்று வேதங்களை விட திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உயர்ந்தது என்பது புலவர்களின் கருத்து. அந்தப் பாடல்:

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று.

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள்.

சாதி, மத எதிர்ப்பு பற்றிய பல கருத்துக்களை வள்ளுவர் கூறியுள்ளார். இதுவே அவரை பல புலவர்கள் வெறுக்க காரணமாயிற்று. இதனால்தான் அவரை பற்றிய அனைத்து தகவல்களும் (வள்ளுவர் பிறந்த ஊர் முதற்கொண்டு) திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

தமிழ் / தமிழர் என்னதாதான் பழம்பெருமை, வீரம், அறிவியல், தொன்மை என்று சிறந்து விளங்கினாலும், ஒருசிலர் தங்கள் சுயநலனுக்காக சதி, மதம் என்று சொல்லி இந்த பெருமையான மொழியையும் இணத்தியும் அழித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவர் பற்றி மேலும் பல சுவாரசியமான அறிய தகவல்கள் படிக்க>>>>

திருவள்ளுவர் பற்றிய அறிய தகவல்கள்

தேடல் தொடர்பான வர்த்திகள்: Thiruvalluvar native place in Tamil, Thiruvalluvar in Tamil, Thiruvalluvar pirantha idam, Thiruvalluvar pirantha oor ethu in Tamil

Related Post

பாரி வள்ளல் வரலாறு

பாரி வள்ளல் வரலாறு

Posted by - ஜூலை 5, 2019 0
அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க இவர் அடைந்த துயரங்கள் பல. பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதித் தக்க அரசர்களை நாடி இப்பெண்களைத் திருமணம் செய்து…
ரமணிச்சந்திரன்

எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் வாழ்க்கை குறிப்புகள்

Posted by - ஜூலை 26, 2020 2
நான் என் தங்கைக்கு எழுதிய கடிதங்களைப் படித்து விட்டு, கதை எழுதுமாறு எனக்கு ஊக்கம் கொடுத்தார். பாலசந்திரனின் மனைவியான ரமணி. 'ரமணிச்சந்திரன்' ஆனதும் அவரது செயலே.
கடையெழு வள்ளல்கள் pdf

7 பேர் மட்டும் தான் வள்ளல்களா !

Posted by - ஜூன் 23, 2019 0
அது ஏன்  7 பேர் மட்டும் தான் வள்ளல்களா ? மற்ற வள்ளல்களுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன தான் வித்தியாசம் உள்ளது.! பார்க்களாம் வாங்க.
ஹியூகோ வுட் - 7

Hugo Woods | தெய்வமாக போற்றப்படும் ஹியூகோ வுட்.

Posted by - செப்டம்பர் 12, 2018 0
இங்குவுள்ள மக்கள் இவரை தெய்வமாக போற்றுகின்றனர். இன்று இன்னும் 1000 “ஹியூகோ வுட்” வேண்டும். அந்த அளவுக்கு நம் நாட்டின் நிலமை உள்ளது.
அதியமான் கோட்டம்

அதியமான் நெடுமான் அஞ்சி

Posted by - ஜூன் 28, 2019 0
ஆயுதங்கள்எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்களின் கிழிந்த சதைகள் ஒட்டி நிறம் மாறி கூர் மங்கிகொல்லனிடத்தில் சரிசெய்ய வைக்கப்பட்டுள்ளன...

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன