தொல்காப்பியர் | தொல்காப்பியம் பற்றி கொஞ்சம் …

  தொல்காப்பியர் | தொல்காப்பியம்

 தொல்காப்பியர் (ஆங்கிலம்: Tholkappiyar) தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ என்பதனால்  அறியத் தக்கது. இவர் அகத்தியரோடு தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர்.

அகத்தியர்பால் இவருடன் கற்றவர்கள்:

 1. அதங்கோட்டாசிரியர்
 2. பனம்பாரனார்
 3. செம்பூட்சேய்
 4. வையாபிகர்
 5. அவிநயனார்
 6. காக்கைபாடினியார்
 7. துராலிங்கர்
 8. வாய்ப்பியர்
 9. கழாரம்பர்
 10. நற்றத்தர்
 11. வாமனர்

என்னும் பதினொருவருமாவர்.

தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர் என்பது,

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளாலும்,

வீங்குகட லுடுத்த வியன்கண்ஞா லத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென
வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக
ழானாப் பெருமை அகத்திய னென்னு
மருந்தவ முனிவ னாக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்

என்னும் பன்னிரு படலச் செய்யுளானு மறியப்படும்.

Tholkappiyar

Last update was on: மே 25, 2020 3:12 மணி
out of stock

வாழ்வியலுக்கும் இலக்கணம் | தமிழின் பெருமை

தொல்காப்பியம் ஆசிரியர் தொல்காப்பியர்

தொல்காப்பியர்

 மற்ற உலக மொழிகளுக்கு இல்லாத பெருமை நம் தாய் தமிழுக்கு இருக்கின்றது. எனவே தான் அறிஞர் பெருமக்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பாராட்டுகின்றார்கள். தமிழுக்கு அந்தப் பெருமை வருவதற்கான காரணம் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்ததேயாகும்.

 பொதுவாக, உலகிலுள்ள பழமையான மொழிகளில் காலந்தோறும் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. மொழியின் எழுத்து, சொல், தொடர் பற்றியே அவை விளக்குகின்றன. இம்முறை தொல்காப்பியம் முதலான எல்லாத் தமிழ் இலக்கணங்களிலும் காணப்படுகின்றது.

ஆனால், பழந்தமிழ்ச் சான்றோர்கள் தாம் வாழ்ந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இலக்கணம் எழுதி வைத்துள்ளனர். தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார்.

 தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலை மிகவும் தெளிவாக வரையறை செய்து விளக்குகின்றார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை எனத் தமிழ் அறிந்த உலக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தொல்காப்பியரின் காலம்

  • தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த ‘முந்துநூல்'(அகத்தியமும்) கண்டிருந்தார்.
  • தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர் என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
  • தொல்காப்பியர் எழுதிய ‘தொல்காப்பியம்’ வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
  • தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
  • வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
  • “தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது” என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் ‘தமிழ் இலக்கிய வரலாறு – தொல்காப்பியம்’ என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
  • இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200 இறுக்கலாம்.
 • செம்மொழி தமிழாய்வு நடு நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை கி.மு 711 என்று பொருத்தியது.

தொல்காப்பியர் காலம் | ஒரு மர்மம்

தொல் பொருட் சான்றுகள் வழியும் ஆழிப் பேரலையால் பழந் தமிழகத்தின் தெற்கிலும் கிழக்கிலும் நிலப்பகுதி கடல் கொண்டதை அறிய முடிகின்றது. பழந்தமிழர் மூன்று சங்கங்களை நிறுவித் தமிழை வளர்த்துள்ளார்கள். முதல் இரண்டு சங்கங்கள் இருந்த பகுதி கடல் கோளால் அழிய அக்காலங்களில் தோன்றிய இலக்கண இலக்கியங்களும் அழிந்து விட்டன. தொல்காப்பியத்தில் என்ப, மொழிப, என்மலர் எனக் குறிக்கப்படும் சொற்களைக் கொண்டே தமிழில் இப்போது கிடைத்துள்ளவற்றுக்கு முன்னுள்ள மரபை அறிந்துகொள்ளலாம்.

 தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.

வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள்.

 • சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர்.

பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.

இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள்.

எனினும் தற்காலத்தில் சில ஆய்வாளர்களால் இது ஏற்க மறுக்கப்படுகின்றது.

தொல்காப்பியர் காலம் கி.மு 5,770 – கி.மு 2,070

சங்க கால புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

மாமூலனார் கி.மு 4ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.

“கள்ளில் ஆத்திரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள்” இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர்.

இதன் மூலம் திருவள்ளுவர் காலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் கி.மு 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. 

மேலும்,

 சங்க கால புலவர் கபிலர் அரசன் இருங்கோவேள் பற்றி கூறுகையில், அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாக துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும், அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார்.

 மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் கி.மு (280-290). ஒரு தலைமுறைக்கு 27 என கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 கி.மு 16 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்ப்பட்ட விடயங்களை பற்றியும், மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார்.

இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் கி.மு 20ஆம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டது என தாராளமாக கூற முடியும். 

வரலாற்றாசிரியர்கள் கி.மு 1500 வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாக கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.

இதன் மூலம்,

 கபிலரின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர்(கி.மு 3 ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (கி.மு 5770-கி.மு 2070) பிறந்தவர்.

 ஆக, கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்ப்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் என துள்ளியமாக தெரிகிறது.

காரணம் நக்கீரர் தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் கி.மு 21 ஆம் நூற்றாண்டுக்கு முற்ப்பட்டது என்பதால் தொல்காப்பியர் கி.மு 2100 கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை

Rs. 210  in stock
1 new from Rs. 210
View Now
தொல்காப்பியம் - 10 Amazon.in
as of மே 25, 2020 3:12 மணி

Features

AuthorSubbu Reddiar N
BindingHardcover
EAN9788183793155
EAN ListEAN List Element: 9788183793155
ISBN8183793150
LabelPalaniappa Brothers
LanguagesName: Tamil; Type: Published
ManufacturerPalaniappa Brothers
Product GroupBook
Product Type NameBOOKS_1973_AND_LATER
Publication Date2010
PublisherPalaniappa Brothers
StudioPalaniappa Brothers
TitleTholkappiyam Kattum Vazkai

தொல்காப்பியம்

 தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியம் பற்றி மேலும் படிக்க: Click Here …

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்

 •  யம்புவது “இயம்” ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது “காப்பியம்”. தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.
 • தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்

 • தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.
 • அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம். ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம்.

இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன.

தொல்காப்பியம் தெளிவுரை

Last update was on: மே 25, 2020 3:12 மணி
out of stock

ஆன்றோர்களின் அரும் பணி

தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மரபாகவும் சுவடிகள் வழியாகவும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றது. உரைகள் தோன்றிய பிறகு தொல்காப்பியத்தின் பெருமை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது.

  ச்சுக்கலை வளர்ந்தபிறகு தமிழறிஞர்கள் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கிய, இலக்கணங்களையும் ஆர்வத்தோடு பதிப் பித்துள்ளனர். இவ்வகையான ஆன்றோர்களின் அரும் பணியாலேயே தமிழ் இன்று உலகோர் அறிந்து போற்றப்படும் நிலையைப் பெற்றுள்ளது.

  தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மேன்மேலும் வளரும்.

தொல்காப்பியப் பூங்கா

தொல்காப்பியப் பூங்கா

தொல்காப்பியப் பூங்கா

  தொல்காப்பியப் பூங்கா அல்லது அடையார் பூங்கா தமிழக அரசால் அடையாரில் திறக்கப்பட்டுள்ள பூங்காவாகும். இப்பூங்காவில் பல வகையான தாவர வகைகள் உள்ளன. இப்பூங்காவிற்கு பழந்தமிழ் நூல் இயற்றிய தமிழ்ப் புலவர் தொல்காப்பியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெளினாட்டுப் பறவைகளையும் இங்கு காணலாம். பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் நீர்நிலைகளாக உள்ளன.

 இப்பூங்காவை மு. கருணாநிதி திறந்து வைத்தார். சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை குறித்து அறிய, பூங்கா திறந்த சில மாதங்களிலேயே நான்காயிரம் பள்ளிக் குழந்தைகள் பார்வையிட்டுச் சென்றனர்.

பறவைகளும் விலங்குகளும்

இருநூறு வகை அரிய பறவைகள் இருப்பதாக அறியப்பட்டாலும் பெரும்பாலானவை அழிவின் விளிம்பில் உள்ளன. தவளை, குருவி, மைனா, வண்ணத்துப்பூச்சி போன்ற வகை வகையான உயிரினங்களை இங்கு காணலாம். சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய அரிய வகை விலங்குகளும் பறவைகளும் இங்கு உள்ளன.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password