வீராணம் ஏரி

வீராணம் ஏரியின் வரலாறும் ஊழலும்

1988 0

வீராணம் ஏரி

        வீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் சேத்தியாத்தோப்பு. வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது கி. பி. 935 முதல் 1037 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.

காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது.

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகள் சென்னையின் மக்களின் குடிநீர்த் தேவையை தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

வீராணம் ஏரி
வீராணத்தை கடவுளாக நேசிக்கும் மக்கள்

பொன்னியின் செல்வன்

       கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இந்த  வீராணம் ஏரியின் கரையில் இருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி ‘வீரநாராயண ஏரி‘ என குறிப்பிடப்பட்டிருக்கும். பொன்னியின் செல்வன் ஆரம்பமே இது தான்.

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில்(ஒரு காதம் என்பது 6.7 கி.மீ), அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.

புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்?

தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

நன்றி கல்கியின் பொண்ணியின் செல்வன்   

[content-egg module=Amazon template=grid]

 வீரநாராயணபுரம் என்ற விண்ணகர்

             துதான் காட்டுமன்னார்கோவிலின் முந்தைய பெயர். விஜயாலய சோழனின் பேரரான முதற் பராந்தக சோழன் மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி என்று பட்டம் பெற்றவன். சோழ பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லை சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திர புகழ்பெற்றவன். சோழசிகாமணி, சூரசிகாமணி, முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணண் என்னும் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.

 கி.பி. 907-ல் சோழநாடு பராந்தக சோழனின் ஆளுகையில் இருந்தபோது, விவசாயத்துக்கு நீராதாரம் இல்லை என்று வீரநாராயணபுரத்து மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். இது இவ்வாறு இருக்க,

   பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள்.  அவர்கள் படையெடுத்து வர கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான்.      எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜதித்தனை ஒரு பெறும் படையுடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்க செய்தான். அந்த படையை சேர்ந்த ஆயிரகணக்கான வீரர்கள் வேலையின்றி சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜதித்தன் ஒரு யோசனை செய்தான்.

   தனது சேனைகளைக் கொண்டு சுமார் 12 கிலோமீட்டர் நீலம் மற்றும் 5 கிலோமீட்டர் அகலம் கொண்ட பெரிய ஏரியை பல மாதங்களாக உயிரை கொடுத்து அந்த படை வீரர்கள் வெட்டி முடித்தார்கள், அதை தன் அருமை தந்தையின் புனைப் பெயரான வீரநாராயணன் ஏரி என்று அழைத்தான்.

  பிற்காலத்தில் தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முண்ணணியில் யானை மீது ஏறி சென்று போரிட்டு பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கி உயிர் நீத்த அந்த மாபெரும் வீரன் ‘யானை மேல் துஞ்சிய தேவன்‘ என பெயர் பெற்றான்.

நீர்ப் பிடிப்பு பகுதிகள்

வீராணம் ஏரி map
வீரநாராயணன் ஏரி

    தொடக்கத்தில், இப்போதைய அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 427.35 சதுர கி.மீ. பகுதிதான் வீராணம் ஏரியின் பிரதான நீர் சேகரப் பகுதியாக இருந்தது. இந்த மாவட்டங்களிலிருந்து ஓடி வரும் மழைநீர், செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை ஆகிய வாய்க்கால்களில் வழிந்தோடி வந்து வீராணத்தை நிரப்பியது.

        கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கிய ராஜேந்திர சோழன், கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக வெட்டிய சோழகங்கம் என்ற ஏரியிலிருந்து (தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது) மழைக் காலங்களில் உபரியாக வெளியேறும் தண்ணீரும் கருவாட்டு ஓடை, வடவாறு ஆகியவற்றின் வழியாக வீராணத்தை வந்தடைகிறது.

சர் ஆர்தர் காட்டன்

          தமிழகத்தில் முக்கிய நீராதாரங்களை உருவாக்கியதில் பென்னி குயிக் போன்ற ஆங்கிலேயப் பொறியாளர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. அவரைப் போலத்தான் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் ( Sir Arthur Thomas Cotton: இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுகிறார்.)
ஹைதராபாத்தில் உள்ள ஆத்தர் காட்டன் சிலை
ஹைதராபாத்தில் உள்ள ஆத்தர் காட்டன் சிலை

        குடகிலிருந்து காவிரியில் திரண்டு வரும் தண்ணீரைத் தேக்கிவைக்க 1836-ல் திருச்சி முக்கொம்பு அருகே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையை (மேலணை) ஆர்தர் காட்டன் கட்டினார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கிராமத்தில் கீழணையையும் கட்டினார்.

(அதன் பிறகுதான் மேட்டூர் அணை கட்டப்பட்டது).

    கீழணை கட்டப்பட்ட பிறகு வீராணம் ஏரியின் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, காவிரித் தண்ணீரும் வீராணத்துக்கு வரத் தொடங்கியது.

வீராணத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் வடவாறு

கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையிலிருந்து வடக்கு ராஜன் கால்வாய், தெற்கு ராஜன் கால்வாய் மற்றும் வடவாறு ஆகிய 3 கால்வாய்கள் பிரிகின்றன. வடக்கு ராஜன் கால்வாய் வழியாக பாயும் தண்ணீர், கடலூர் மாவட்ட பாசனத்துக்கும், தெற்கு ராஜன் கால்வாய் வழியாக பாயும் தண்ணீர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பாசனத்துக்கும் பயன்படுகிறது. வடவாறு வழியாக 22 கி.மீ. பயணிக்கும் தண்ணீர், வீராணம் ஏரியின் தெற்கு எல்லையில் ஏரியை வந்தடைகிறது.

நீர்மட்டம் காட்டும் ஜலகண்டீஸ்வரர்

நீர் கண்டேஸ்வரர் சிலை
நீர் கண்டேஸ்வரர் சிலை

வீராணம் ஏரியின் தெற்கு முனை லால்பேட்டை பகுதியில் இருக்கிறது. ஏரி முழுக் கொள்ளளவை தாண்டும்போது, தண்ணீரை வெள்ளியங்கால் வாய்க்காலில் வெளியேற்றுவதற்காக 14 மதகுகள் அமைத்துள்ளனர்.

ரியின் நீர்மட்டத்தை அறிவதற்காக இந்த மதகுகள் இருக்கும் பகுதியில் ஜலகண்டீஸ்வரர் சிலையை புடைப்புச் சிலையாக நிறுவியுள்ளனர். வடக்கு திசையில் ஏரியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் கழுத்துப் பகுதிக்கு மேலே தண்ணீர் உயர்ந்தால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாக கணிக்கப்பட்டிருக் கிறது. இப்போதும் இந்த அளவீடு மிகத் துல்லியமாக உள்ளது.

அதேபோல, ஏரியின் வடக்கு எல்லையில் உள்ள புதிய பாசன வடிகால்வாயில் 3 மதகுகள் உள்ளன. இதன் வழியாக பாசனத்துக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2,550 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட முடியும்.

வீராணம் ஏரி ஊழல்

வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் இலிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 இல் நிறைவடைந்தது.

வீராணம் ஏரி வரலாறும் ஊழலும்

  திமுகவின் வரலாற்றில் இன்றளவும் பேசப்படும் புகழ்பெற்ற ஊழல்களில் வீராணம் ஊழல் குறிப்பிடதக்கது. அதாவது சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீரை கொண்டுவரும் திட்டம் அது.

அதற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து நெய்வேலி பக்கத்தில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து பின்னர் அதை 198 கிலோமீட்டர் தூரம் தரைவழியாக குழாய் பதித்து சென்னைக்கு கொண்டு வரவேண்டும். அதற்காக பெரும் குழாய்களை பதிக்கவும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை செய்யவும் பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.

  றுதியில் சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் இறுதிசெய்யப்பட்டது, சிறிய நிறுவனமான சத்தியநாராயணா பிரதர்ஸ் இன் நடைமுறை மூலதனம் முழுவதும் கமிஷனுக்காகவே செலவழிக்கப்பட்டதன் காரணமாக இந்நிறுவனம் வீராணம் திட்டத்திற்கான வேலையை தொடங்கி முடிக்க முடியாமல் போனது.

16 கோடி திட்டத்திற்கு இரண்டரை சதம் 40 லட்ச ரூபாய் டீல்.
அதேகாலகட்டத்தில் சென்னை அண்ணாசாலையில் ஒரு கிரவுண்டு இடம், 1240 சதுரடி கட்டிடத்துடன் சேர்த்து வெரும் ரூ 45,000/- (என்றால் பணமதிப்பை கணக்கிட்டு கொள்ளலாம் ).

றுதியில் தன் சோக நிலையையும், எதார்த்ததையும் எழுதி வைத்து விட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இது அப்போதைய பத்திரிகைகளில் பெருஞ் செய்தியாக வெளிவந்தது.

வீராணம் ஏரி ஊழல் குறித்து சர்க்காரியா கமிஷன் அறிக்கை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.

கவனிப்பார் இல்லாத ஏரிகள்

        Polluted-river

      பொதுவாக கடலூர் மாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீர்நிலைகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆகியவை தூர்வாரப்படவில்லை என்பதே உண்மை. இதனுள் வீராணம் ஏரியும் அடங்கும்.

        வீராணம் முழுமையாக தூர்வாரப்படாமல் மணலும், வண்டல் மண்ணும் அதிக அளவில் படிந்துள்ளது. இதனால் இந்த ஏரியில் தண்ணீரை அதிக அளவில் தேக்கி வைக்க முடியவில்லை. அதிலும் மிஞ்சும் தண்ணீரானது சென்னையின் குடிநீர்த் தேவைக்கு எடுத்துக்கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலிருந்து 2010-ம் ஆண்டு வெள்ளம், 2011- தானே புயல் மற்றும் 2015-ம் ஆண்டு வெள்ளம் என கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டமாக ஆகிப்போனது.

இதற்கெல்லாம் காரணம் நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததுதான்.

dry-indian-rivers

விடுதலைக்குப் பின்னர் உருவான பசுமைப் புரட்சியின் விளைவால் ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதனால் இன்று நோய்வாய்ப்பட்ட தலைமுறைகள் அதிகம் உருவானது.

அதேபோல், இப்போது தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி, காடுகள் அழிக்கப்படுதல், விவசாய நிலங்கள் குறைந்து வருதல், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் பருவமழை பொய்த்துபோதல் என பல்வேறு காரணங்களால் மறைமுகமாக பாதிக்கப்படுவது விவசாயம்தான். விவசாயம் பாதிக்கப்பட்டால் நேரடியாக பாதிக்கப்படுவது மக்களாகிய நாம்தான்.

மக்களின் அறியாமையை பயன்படுத்திய, அரசியல் வியாதிகளால் இன்று நம் நீர் நிலைகள் முழுவதும் பாழ்பட்டு நிற்கிறது. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மட்டும் ‘இனி’ மாறப்போவதில்லை என்பது மட்டும் உன்மை.

நம் இயற்கை வளங்கள் எங்கே !

[content-egg module=Youtube template=simple]

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன