WhatsApp Cart அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? ஈசி டிப்ஸ்..
வாட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு கார்ட் அம்சம்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஈ-காமர்ஸ் இயங்குதளங்களைப் போன்ற ஷாப்பிங் அனுபவத்தையும் இது வழங்குகிறது. இங்கு அவர்கள் தங்கள் கார்டில் இருந்து பொருட்களைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். இந்த அம்சம் வணிக உரிமையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் அனைத்து கோரிக்கைகள் மற்றும் விற்பனைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

வாட்ஸ்அப் கார்ட் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் ஒரு வாட்ஸ்அப் பிசினஸ் பயனராக இருந்தால், கார்ட் அம்சம் உங்கள் கணக்கில் தானாகவே கிடைக்கும். இருப்பினும், கார்ட் அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் வாட்ஸ்அப் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். அப்டேட் செய்யப்படவில்லை என்றால் உடனே அப்டேட் செய்யுங்கள். உங்களின் வாட்ஸ்அப் பிசினஸ் ஆப்ஸ் அப்டேட் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் இதை பயன்படுத்த முடியும்.
யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!

கார்ட் அம்சத்தைப் பயன்படுத்தி எப்படி ஒரு ஆர்டரை பதிவு செய்வது?
பயனர்களுக்குத் தடையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக வாட்ஸ்அப் கார்ட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ்அப்பில் பிசினஸ் கணக்கில் ஈடுபடும்போது, நீங்கள் வாங்க நினைக்கும் தயாரிப்பு பற்றி உறுதியாக இருந்தால் ‘Add to Cart’ பட்டனை அழுத்தி அதை ஆர்டர் செய்ய தயார் செய்யலாம். உங்கள் கார்டில் பொருட்களைச் சேர்க்க இதைச் செய்யுங்கள்.

வணிகரின் பிசினஸ் ப்ரொபைல்
கார்டில் தயாரிப்புகளைச் சேர்க்க, வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் வாங்க விரும்பும் வணிகரின் பிசினஸ் ப்ரொபைல் செல்லவும். ஷாப்பிங் ஐகானைத் கிளிக் செய்யவும். இது வணிகரின் பெயர் அருகில் அமைந்திருக்கும் என்பது கவனத்திற்கு. வணிக உரிமையாளர் பராமரித்த பட்டியலைத் திறந்து பல தயாரிப்புகளை நீங்கள் பிரௌஸ் செய்து உங்களுக்கு பிடித்தமான பொருளைத் தேர்வு செய்யலாம்.

Add to Cart விருப்பத்தை கிளிக் செய்யவும்
நீங்கள் வாங்க விரும்பும் தயாரிப்பை கிளிக் செய்து, இப்போது Add to Cart விருப்பத்தை கிளிக் செய்யவும். தயாரிப்பு தொடர்பாகக் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்க வணிகருக்கு நீங்கள் நேரடியாக மெசேஜ் செய்து, உங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். இப்படி உங்கள் வாட்ஸ்அப் பிசினஸ் மூலம் தயாரிப்புகளை ஆட் செய்து பொருட்களை பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம்.
WhatsApp Cart அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? ஈசி டிப்ஸ்.. Source link
Tags: How to Tech